அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Wednesday, March 12, 2008
சட்டபடி விபச்சார விடுதிகள்
விபசாரத்தில் கைதாகும் ஆண்களுக்கும் தண்டனை வேண்டும் (கிட்டதட்ட 7 ஆண்டுகள்) என்ற வரைவு அறிக்கைக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல், சுகாதார துறை அமைச்சர் அன்புமணி, விளையாட்டு துறை அமைச்சர் (என்ன விளையாட்டு இது...?) மணிசங்கர ஐயர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதற்க்கு பதிலாக வெளிநாடுகளை போல சட்டபடி விபச்சாரம் செயல்பட அனுமதி அளித்து, லைசன்ஸ் வழங்கி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம் - வரிகூட வசூலிக்கலாமாம் (அது ஒன்னுதான் இன்னும் பாக்கி).. புரோக்கர் மற்றும் போலீசார் கெடுபிடியில் (அட கடவுளே.. ) இருந்து தப்பிக்கலாம் என யோசனை சொல்கிறார்கள். அட இது கேட்க மறந்து விட்டேனே - இந்த கற்பு கற்பு என ஒரு விஷயம் இருந்ததே..!! அதுதான் அய்யா.. நம் தேசத்தின் அடிப்படை ஒழுக்கம்..!! அது பற்றி ஏதாவது தெரிந்தால் கொஞ்சம் மத்திய அமைச்சர்களுக்கும் சொல்லி கொடுங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உலகிலேயே பழைமையான தொழில்.. இதைத் தடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை!
பல மேற்குலக நாடுகளில் சட்டப்படி இது செல்லுபடியாகும். இலங்கையிலு கூட முன்னைய பிரதமராக இருந்த விக்கிரமசிங்க காலத்தில் விபச்சாரத்தை சட்டப்படி அங்கீகரிக்க முடிவெடுத்தார் என்று சொல்வார்கள்.
இது மனிதனின் ஒரு அடிப்படைத் தேவை என்றும், இதை கட்டுப்படுத்துவதால் வன்முறை பெருகுகின்றது என்று வாதாடுபவர்களைக் கண்டிருக்கின்றேன்.
பொதுவாக படித்த மேல்தட்டு வர்க்கம் இதற்கு ஆதரவு தருவதை கவனித்திருக்கின்றேன்.
பி.கு: எதற்கு Word Verification வைத்திருக்கீங்க? Spam comments வருவதுண்டா? இல்லையானால் எடுத்துவிடுங்க. மற்றவங்க இதப்பாத்திட்டே பின்னூட்டமிடாமல் ஓடிடுவாங்க! ;)
உண்மை நண்பரே. அது ஒழிக்க முடியாத தொழில் மட்டுமல்ல.. பல நாடுகளின் மறைமுக பொருளாதாரமும் அரசியலும் கூட அதனை ஒருவகையான மையமாக கொண்டே அமைந்திருக்கின்றது. ஆதரவு எதிர்ப்பு என்பதை தாண்டி - விபச்சாரம் பற்றிய ஒரு கூர்மையான பார்வை வேண்டும். அதில் ஈடுபடும் ஆணுக்கும் சம தண்டனை என்பதை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி வேண்டும். பதில் என்பது கற்பு என்ற குழப்பத்தை மையமாக கொள்ளாமல் - நிதர்சனமான உண்மை பற்றிய தெளிவுடன் இருக்க வேண்டும்..
Hi
Sex is a part and parcel of life there is nothing to hide in this. If there is a person who does not have any feeling for other girls then let me tell you either he is lieing or else something wrong in him until and unless he is a saint. Just a feeling that this girl looks sexy beautiful lips etc is got to do with sex. If sex is something wrong then having thoughts within you as such is wrong.
Post a Comment