அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 28, 2006

நட்போ காதலோ...

சென்ற வாரம் ஒரு நாள்.. தூக்கம் வராத ஒரு பின்னிரவு பொழுது.. ரேடியோ மிர்ச்சி எப்.எம் மில் ஏதோ ஒரு நிகழ்ச்சி.. ஒரு பெண் எல்லாரையும் கேள்வி கேட்டு, பதில் வாங்கி, பாட்டு போட்டு உற்சாகமிழந்து கொண்டு இருந்த நேரம்..பொதுவாக நான் பாடல்களை மட்டும் கேட்பதுண்டு.. நிகழ்ச்சியின் இடையே பேசுபவர்கள் இரவின் ரம்மியத்தை கெடுத்துவிடுவாதக நான் கருதுவதால்.. அன்று அந்த பெண் ஒரு அற்புதமான கேள்வியை எழுப்பினாள்.. ஒரு ஆணும் பெண்ணும் வெறும் நட்பாக மட்டுமே பழக முடியுமா.. நெருங்கிய நட்பாக.. அல்லது ஒரு மெல்லிய காதல் அவர்களிடையே இருக்குமா.. என்பது அந்த கேள்வி.. இது கொஞ்சமாய் என் நினைவுகளை தூண்டிவிட்டது என்று சொல்லலாம். மெல்ல நிதானமாக யோசித்து பார்க்கையில் என் வாழ்வில்
இதுவரை நான் கடந்து வந்த எல்லா பெண்களிடமும் வெறும் நட்பாக மட்டும் இருந்திருக்கிறேனா.. அல்லது வெகு சில பெண்களிடம் மட்டுமே இருந்ததாக நான் கருதிய மெல்லிய காதலும் அதனும் மெல்லிய காமமும் எல்லா பெண்களிடமும் இருந்ததா.. இது விஷயமாய விவாதிக்கவும் முடியாது.. நம் சமுதாயத்தில் மிக முக்கியமாக எல்லாரிடமும் முகமூடி அணியும் கட்டாயம் எல்லாருக்கும் இருக்கிறது.. எனக்கு நட்பை தவிர வேறு உணர்வுகளும் இருப்பதாக சொன்னால்...எந்த பெண்ணும் பழக யோசிப்பார்கள்.. (காரணம் தெரியாது.. ). வெறும் நட்புதான் என்றால் அது அடிமுட்டாள்தனமான வாதம் என்று நமக்கே தெரியும்..(இதுக்கும் காரணம் தெரியாது).. உடலும் உள்ளமும் ஒரு நேசித்தலில் இல்லாமல் இருக்குமானால் எதிர்பாலினம் சார்ந்த நட்பு சரிவர அமையாது என்பது என் கருத்து. இல்லாவிட்டால்..வெறும் தாண்டி போகும் போது வாழ்த்து சொல்லும் நட்பாக இருக்க வேண்டும்.. அது நட்பு அல்ல என்றும் சொல்வேன். நட்பு என்பதில் .. பக்கத்தில் உட்கார்ந்து பேச வேண்டும்...பேசுவதை கேட்க வேண்டும்.. கிண்டல் வேண்டும்..கேலி வேண்டும்.. அரவணைப்பு வேண்டும்.. அன்பு வேண்டும்.. கேள்விகள் வேண்டும்.. சில பதில்களும் வேண்டும்.. எச்சரிக்கைகள் வேண்டும்.. தூண்டுதல்கள் வேண்டும். .. நம்பிக்கைகள் வேண்டு..செல்ல பார்வைகள் வேண்டும்.. சட்டென கோபங்கள் வேண்டும் ..குளிர்ந்த குறும்புகள் வேண்டும்..விமர்ச்சனங்கள் வேண்டும்.. அமோதிப்புகள் வேண்டும் ... இது எல்லாம் இருக்க முதலில் ஒரு ஈடுபாடு வேண்டும்.. அது உடலும் உள்ளமும் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.. இது என் கருத்து.. உங்களுக்கு மாற்று கருத்துகள் இருந்தால்.. என்னுடன் விவாதியுங்கள்..

3 comments:

Premalatha said...

well, where do you draw the line?
:)

impressed btw.

சுபா காரைக்குடி said...

நம் சமுதாயத்தில் முகமூடி அணியும் கட்டாயம் எல்லாருக்கும் இருக்கிறது;ஆனால், எல்லாரிடமும் முகமூடி அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. நெருங்கிய நண்பர்களிடம், அது பெண் நட்பாக இருந்தாலும் சரி; ஆண் நட்பாக இருந்தாலும் சரி;மனதில் உள்ளதை உள்ளபடியே பேச வேண்டும்.உண்மையாக இருக்க முடியணும். மனதில் உள்ளதை உள்ளபடியே பேச முடியவில்லை என்றால், நெருங்கிய நட்பிற்க்கும், மற்ற நட்பு மற்றும் உறவிற்கும் என்ன வித்தியாசம்???

உங்கள் கருத்துபடி பார்த்தால், மனைவி மட்டுமே நெருங்கிய தோழியாக இருக்க முடியும் என்கிறீர்கள் !! அப்படி என்றால், மனைவிக்கும், நெருங்கிய தோழிக்கும் என்ன வித்தியாசம்???

உண்மையான, புரிந்து கொண்ட நட்பாக இருந்தால்,நீங்கள் சொன்ன "நட்பு என்பதில் .. பக்கத்தில் உட்கார்ந்து பேச வேண்டும்... ....குளிர்ந்த குறும்புகள் வேண்டும்..விமர்ச்சனங்கள் வேண்டும்.. அமோதிப்புகள் வேண்டும் ... " எல்லாம் இருக்கும்!! கூடவே எல்லை தாண்டும் போது,அன்போடு அதட்டும் உரிமையும் இருக்கும் !!அதட்டும் போது அதை புரிந்து கொண்டு ஏற்று கொள்வதற்கும்,எல்லை தாண்டும் போது புரிந்து கொண்டு அன்போடு அதட்டுவதற்கும் மன பக்குவம் வேண்டும் !!! அந்த மன பக்குவம் இருந்தால்,ஆண்,பெண் நட்பு நெருங்கிய நட்பாக,மனதில் உள்ளதை உள்ளபடியே பேச கூடிய நட்பாக,உண்மையான, புரிந்து கொண்ட நட்பாக இருக்கும் !!

Anonymous said...

In all the friendships which we have with the opposite sex there is surely a small % of love involved or what u call lust also, to some extent. Only the % varies and its really very fuzzy. But only because of this mixture, life is interesting, make us remind about those very nice moments passed, and keeps us on the move (atleast for some point of time).This is only for friendship i'm talking.

But when it comes to life partners or may be fiance (would-be etc.,)there is first attraction at the beginning then there is understanding and then only love.But what about friendship?

Here also the true friendship happens to be very very rare because how many of those who got married are true to their spouses about their past or to that matter anything?

There are wives who spend money without the knowledge of their husbands and there are men who drink without their wives knowing!

If people think that their wife / husband-to-be, will be their true friends later,with whom love is also not something said guilty, its really not true.

Of course there are some loyal people around but the percentage will be very very less.Also the % of loyalty will also be very very fuzzy.

This seems to be the practical truth and no one is to blame for it.So according to me there seems to be no reason to analyse this strange but interesting fact!

We should just be careful that we dont offend anyone and we make others feel comfortable.