அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 28, 2006

மரணமும் உறவுகளும்

மனித உறவுகளை .. வாழ்வின் நியதிகளை, நெறிமுறைகளை, வாழ்க்கையின்
உறவுகளை மேம்படுத்துபவை எவை என்று எண்ணும் போது என் நினைவுகளில்
வருவது மரணங்களும் விபத்துகளும். விபத்தில் இருந்து மீண்டு
வருபவர்கள், மரணத்தின் கதவுகளில் விரல்களின் ரேகைகளை
பதித்தவர்கள் மற்ற எல்லாரையும் விட பிற மனிதர்களையும், தன்
வாழ்க்கையையும் அதிகம் நேசிக்கிறார்கள்..வாழ்வின் அர்த்தமற்ற தன்மை
அவர்களுக்கு தெரிந்து விடுகிறது..நட்பு, அன்பு, காமம் , பசி, ருசி, பயணம்
எல்லாவற்றையும் மிக அதிகமாக உணர்வுடன் நேசிக்க தொடங்கி
விடுகிறார்கள். அவர்களின் பார்வை, உலகத்தை பார்க்கும் நோக்கு எல்லாம் மாறி
விடுகிறது..சிலர் சன்னியாசமும் பூணுவதுண்டு எனினும் அதுவும் உலகத்தை
பார்க்கும் முறையை மாற்றும் கோணம்தான். விபத்துகளும் இப்படிதான். ஒரு
முறை விபத்தில் சிக்கி..மரணத்தின் கோரத்தை..இழப்பை பார்க்க
நேரிடுபவர்கள்..பிழைத்து வந்ததும் வாழ்க்கையை நேசித்து வாழ
தொடங்கி விடுவதுண்டு. பழைய கோபங்கள்.. குரோதங்கள் இன்றி..
வாழ்க்கையை நேசிப்பதற்ற்கு தக்கதாக மாற்றிவிடுவது எது...?
பயம்..!!! சில நேரங்களில் ஆம்.. பயம்.. வாழ்வை நேசிக்க கற்று கொடுத்து
விடுகிறது. உறவுகளை நேசிக்கவும் மதிக்கவும் பயம் கற்று
கொடுக்கிறது.. அது மரணம் பற்றிய பயமாக இருந்தால் மட்டுமே..சில
வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு கதை.. தன் தந்தையுடன் நிறைய
கருத்து வேறுபாடுகளில் இருக்கும் மகன், தன் நண்பனின் தந்தை இறந்த
துக்க காரியத்துக்கு போய்வந்ததும்,...முற்றிலும் மாறி..தன் தந்தையை
நேசிக்க தொடங்குகிறான்..அவர் வாதங்களின் கோணத்தை உணர்கிறான்.
மரணம் எது வழியாகவும் வரலாம்..விபத்தோ.. அல்லது
இயற்க்கையாகவோ.. ஆனால் எந்த மரணமும் .. சார்ந்தவர்களின் உள்ளங்களில்
மாற்றங்களை உருவாக்குகிறது என்பது நிஜம். மரணபயம்.. ஒரு தனி
மனிதனின் வாழ்வின் போக்கையே மாற்றகூடியது. இதில் தத்துவங்களுக்கு
இடமில்லை.. பகவத்கீதையும் மற்றும் பல புத்தகங்களும் மரணம்
பற்றி சொல்லியிருந்தாலும்.. யாராலும் மாற்ற முடியாத மனித
மனங்களை..அவற்றின் மன அடைப்புகளை நீக்கும் சக்தி மரணத்துக்கு
உள்ளதாக கருதுகிறேன்.

1 comment:

சுபா காரைக்குடி said...

யாராலும் மாற்ற முடியாத மனித
மனங்களை..அவற்றின் மன அடைப்புகளை நீக்கும் சக்தி மரணத்துக்கு உண்டு என்பது உண்மை !!

"உறவுகளை நேசிக்கவும் மதிக்கவும் பயம் கற்று
கொடுக்கிறது.. அது மரணம் பற்றிய பயமாக இருந்தால் மட்டுமே.."...

நாளை நிச்சயமில்லை; இன்று,இப்பொழுது மட்டும் தான் நிச்சயம். இன்றே வாழ்ந்திடு, இனிதே வாழ்ந்திடு என்ற உண்மையை புரிந்து கொண்டவர்கள் உறவுகளை நேசிக்கவும் மதிக்கவும் கற்று கொள்கிறார்கள்!! புரிந்து கொள்ளாமல் பயத்தினால் மாறுபவர்கள்,சிறிது காலம் கடந்ததும், மரணம் மறந்து,பயம் மறந்து மீண்டும் தான் என்ற வட்டத்துக்குள் உழன்று, நேசம் மறக்கிறார்கள்!!