அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 21, 2005

உணவு அதன் ...

பெறும்பாலான ஞாயிற்றுகிழமை காலைகள், சிற்றுண்டி இல்லாமலேயே போய்விடுகின்றன சென்னையில். கோவையில் இருந்தால் சூடாய் இட்லியும் காரமாய் தக்காளி வெங்காய சட்னியும் ஞாயிறு காலையை உன்னதமாகிவிடும். கிராமத்தில் இருந்தபோது, இட்லியும் கறிகுழம்பும் நாக்கில் விளையாடும். சென்னைவாழ்க்கையில், காலை உணவு தவிர்க்கபடுவதால் மதிய உணவு கொஞ்சம் கனமாகவே அமைவதுண்டு. இந்த முறை நண்பர்களுடன் பாண்டிபஜார் அஞ்சப்பர் போக எண்ணித்து நடந்தோம்-அங்கே சாப்பிட வரிசையில் ஏற்கனவே நின்றிருந்ததால், கொஞ்சம் தள்ளி இதுவரை போக்குவரத்தில் மட்டுமே கவனித்திருந்த நெல்லையப்பர் உணவகம் சென்றோம். நண்பர் லோகுவின் கூற்றுபடி அது இயல்பான திருநெல்வேலி பிரியாணி கடை. சிக்கன் பிரியாணியின் சுவையும், சிக்கன் துண்டுகளின் மசாலாவும் வேகவைக்கபட்டிருந்த பதமும் நண்பருக்கு கிராம நாட்களை ஞாபகபடுத்தின. நானும் கொஞ்சம் சுவைத்து பார்த்தேன். திங்களூர் சுவை. அப்புறம் மண்சட்டி மீன்குழம்பு. உறைப்பும், புளிப்பும், பூண்டும் மசாலாவும் சேர்தரைத்த சுகானுபவம். ஊர்புரத்து மீன்குழம்பை நினைவுறுத்தும் சுவை. வெந்த மீன் துண்டு முட்கள் பிரிந்து நாக்கில் கரைகிறது. மொத்தத்தில் அற்புதமான சாப்பாடு. ரசமும் அமிர்தம் ஆனால் தயிர் மட்டும் சென்னை பாலில்... இனி மாதம் இருமுறையாவது ஞாயிறு மதியங்களில் என்னை அங்கு பார்க்கலாம்.

மீன் சாப்பிடுவது ஒரு கலையாக பயிற்றுவிக்க பட்டது என் பாட்டியாலும் அப்பாவாலும். பாட்டி காரமும் உப்பும் கலந்த கலவையை மீன் துண்டுகள் மேல்தடவி மெல்ல குத்திவிட்டு மசாலா இறங்கியதும் பொறித்து எடுத்த மீனில் முள் பிரித்து சதைமட்டும் சேர்த்து உறைக்கும் மசாலாவோடு தருவார். இந்த மசாலா விஷயத்தில் எங்கள் வீட்டில் பணி புரிந்த ஒரு முஸல்மானிய அம்மா வித்தியாசமான சுவையை தருபவர். எனினும் பாட்டி மசாலா எனக்கு பிடித்தமானது. மீனின் சதையை மெல்ல விண்டி, நாக்கின் நுனியில் வைத்தி மெல்ல உறிஞ்சி, பின்னர் நாக்கால் சதையை நிரவி மேலன்னத்தில் மீன் முள்ளை தரம் பிரித்து அதுக்குள் சேர்ந்திருக்கும் மசாலா சுவை உமிழ்நீரை சட்டென விழுங்கி, பின்னர் மீன் முள்ளை உதடு ஓரத்தில் ஒதுக்கி, சதையை சுவைக்கும் கலை அப்பா சொல்லி தந்தது. வேர்கடலை உரிக்கும் வேகமாக கலையும், ஆட்டிறைச்சியின் எலும்பு கடிக்கும் உக்தியும் அப்பாவிடம் கற்ற வித்தைகள்.

உணவு அதன் சுவையை கொண்டும், சமைக்கும் பாகத்தை கொண்டும், பரிமாறும் பரிவை கொண்டும் உறவுகளை நெருக்கமாக்கி கொடுக்கிறது என்பது என் கருத்து. முகம் அறியாத நிறைய உறவுகளை எனக்கு கொடுத்து உணவினால் வந்த உறவுதான். பெரும்பாலான உறவினர் நண்பர் திருமணங்களில் சமையல் அறையில் உள்ள வித்தகர்களிடம் பழக்கம் கொண்டவன் நான். அவர்களின் வாழ்க்கையில் உணவளித்தல் என்பது ஒரு சுவாசம் போல நிறைந்திருந்தது. இன்றெல்லாம் ஓட்டல்களில் வைக்கபடும் திருமணங்களில் உணவு என்பது சம்பிர்தாயமான ஒன்றாகிவிட்டது. ஆனாலும் நம்மை சுற்றி முகம் தெரியாத எத்தனையோ சமையல் வித்தகர்கள் உலகின் பசியை சுவையாயும் பரிவாலும் தீர்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

3 comments:

rajkumar said...

பசியை தூண்டும் வகையில் எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.

அன்புடன்

ராஜ்குமார்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பத்துமணிக்கே பசிக்கிறமாதிரி சென்ஞ்சுட்டீங்களே! :)

நல்லா எழுதி இருக்கீங்க.

கொஞ்சம் இப்படி எழுதினீங்கன்னா, பல வருடங்களாக சென்னைப்பக்கம் போகாமல் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு படிக்க நன்றாக இருக்கும்.

-மதி

துளசி கோபால் said...

இப்படி எத்தனைபேர் கிளம்பி இருக்கீங்க?

இப்ப, இதைப் படிச்சதும் பயங்கரப் பசி. என்ன செய்யலாம்?

பதில் சொல்லிட்டுப் போங்க.:-)