அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 21, 2005

மூன்று நாட்கள்

மூன்று நாட்கள் கோவையில் சந்தோஷம். செல்லமான மழைகாற்றுடன் கூடிய சீதோஷனமும், அம்மாவின் மோர்குழம்பும், மத்தியான தூக்கமும், சூடான காப்பியுடன் சுவையான நண்பர்கள் வட்டமும் மூன்று நாட்களை சில வினாடிகளில் முடிந்த உணர்வுடன் முடித்துவிட்டது. அம்மா ரொம்பவுமே பொறுமைசாலி . என் வெட்டிகதைகளைகளையும் புலம்பல்களையும் ஆர்வத்தோடு கேட்பது கொஞ்சம் கஷ்டம்தான். சின்ன ஊரில் இருக்கும் சுகம் பெரும்நகரங்களில் கிடைப்பதில்லை என்பது என் கருத்து. சொந்த கிராமங்களின் வாழ்க்கையை யாராவது பெருநகரவாழ்க்கையோடு ஒப்பிட முடியுமா..?

என்னை பொறுத்தவரை, பெருநகரங்கள் ஆள்விழுங்கும் வட்டங்களாகவே இருக்கின்றன. மனிதர்களை விட்டில்பூச்சிகளை போல் பணமும், கவர்ச்சியும், ஆடம்பரமும், புகழும் காட்டி ஈர்கின்றன.

கலை, சமுதாய உணர்வு, மனிதாபிமானம், அடிப்படை பண்பு, ஒருங்கிணைந்த வாழ்க்கைமுறை இவை எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக குழிக்குள் புதைக்கபடுகின்றன.

பயமும், பிரமிப்பும் கலந்த நிச்சயமற்ற, தொழில்நேர்மையற்ற, கலர்கனவுகள் மட்டுமே நகர வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது.

1 comment:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//மூன்று நாட்கள் கோவையில் சந்தோஷம். செல்லமான மழைகாற்றுடன் கூடிய சீதோஷனமும், அம்மாவின் மோர்குழம்பும், மத்தியான தூக்கமும், சூடான காப்பியுடன் சுவையான நண்பர்கள் வட்டமும் மூன்று நாட்களை சில வினாடிகளில் முடிந்த உணர்வுடன் முடித்துவிட்டது.//

ம்ம்.. பொறாமையோடு படிக்க வைத்துவிட்டீர்கள். :)

-மதி