அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 28, 2005

கற்பு...

கற்பு... கடந்த சில வாரங்களாக ஜோதிட சிகாமணி, ஆவிகள் உலகம், சிறுவர் மலர் தவிர ஏறக்குறைய எல்லா நாள் வார மாத பத்திரிக்கைகளும் விவாதித்து வரும் விஷயமாகிவிட்டிருக்கிறது. கொஞ்சம் கவனித்து பார்த்தால் பொதுவில் எல்லோரும் தங்களுடைய கருத்துகளை, தங்களின் சுயம் சார்ந்த கருத்துகளை சொல்வது பிடிபடுகிறது. இதில் பொது கருத்து எதுவும் இல்லை. நான் தான் சமூகம் என்ற உணர்வு அவர்களில் கருத்து வெளிப்படும் பாங்கில் தெரிகிறது. மெல்ல மெல்ல பூனைகள் சாக்கில் இருந்து வெளிவருகின்றன. நிஜமான சமூகத்தில் முகம் முகமூடிகளின் அலங்காரமின்றி மெல்ல தெரிகின்றது. "நாங்கெல்லாம் ஒழுக்கசீலர்கள்..." என்ற அரிதாரபூச்சு மெல்ல கலைகிறது. ஒழுக்கம் என்பதின் தெளிவு பற்றிய அறிவு சமுதாயத்தின் பல்வேறு கலாச்சாரங்களில் இருந்தும் வெளிப்படுகிறது. இதுதான் உண்மை என்பதை மனமார்ந்து ஒத்து கொள்வதில் என்ன தயக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. உண்மையை பற்றிய ஒரு சர்ச்சையில் எல்லாரும் கொஞ்சம் குளிர்காய்ந்து கொள்கிறார்கள். சல்மா சொல்லியிருந்தது போல " பிரச்சனை கற்பு அல்ல.. சொன்னது யார் என்பது தான்". சர்ச்சைக்குரிய விஷயங்களை சொல்லும் ஆண்கள் போல சர்ச்சைகுரிய விஷயங்களை பேசும் பெண்களை சமூகம் கவனிப்பதில்லை. நிறம் என்றும் வேறுபட்டே இருக்கிறது. கருத்துக்களை விட சொன்னது யார் எந்த சாதி, எந்த மதம் ஆணா பெண்ணா என்ற கவனிப்பில் கருத்தின் உணர்வு மட்டுபடுகிறது. திரைப்படம், மருத்துவம், சட்டம், மற்றும் பெண் இயக்கங்கள் மெல்ல மெல்ல சுயம் பற்றிய புரிதலை, வெளிபடையாக சொல்கின்றன. ஞானி, பாரதிராஜா, டாக்டர் ஷாலினி மற்றும் பலர் பாராட்டுக்கு உரியவர்கள். இவர்களின் கருத்துகளை விட கருத்து சொல்லபட்ட விதமும், என் கருத்து என்ற கர்வமும், தைரியமும் பாராட்டுக்கு உரியவை. சானியா மிர்சாவின் பின்வாங்கலில் மதம் சார்ந்த பயம் தெரிகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பாலுறவு தெளிவு போன்றவை சமுதாயம் வளர வளர சொல்லி கொடுக்கபட வேண்டியவை என்பதில் ஒரு பொதுவான கருத்து இருப்பது நல்லது.

1 comment:

ஜயராமன் said...

தங்கள் பதிவு தவறான போக்கில் எழுதப்பட்டிருக்கிறது.

தாங்களை நிறைய குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

என் பதில் கருத்துக்களை இங்கு தங்கள் முன் வைக்கிறேன்.

1. கற்பு எய்ட்ஸ் பிரச்சினைக்கு எதிறானது அல்ல. அனுகூலமானது. கற்புள்ள சமுதாயத்தில் எய்ட்ஸ் பிரச்சினை இருக்காது. அதனால் முரண்பாடு எதிர்ப்பவர்களிடமில்லை. எய்ட்ஸ் தடுப்பை வளர்ப்போம். ஆனால், ப்ரீ செக்ஸையும் வளர்ப்போம் என்கிற தவறியவர்களிடம் இருக்கிறது.

2. பல வேறுபட்ட கருத்துக்கள் சமுதாயத்தின் முகமூடியை கழட்டவில்லை. (ஏனைன்றால், இச்சமுதாயம் நேர்மையாகத்தான் இருக்கிறது. ஏதும், முகமூடி அணிந்திருக்கவில்லை). இது, கலாசாரம் சீரழிகிறது, அதை காக்க வேண்டும் என்று உண்மையாகவை ஆதங்கப்படும் வர்கத்திற்கும், சமுதாய கட்டுப்பாடுகளைத் தகர்த்து தான்தோன்றித்தனமாக வாழ விரும்பும் வர்க்கத்துக்கும் நடக்கும் கருத்து மோதலே ஆகும்.

நன்றி

ஜயராமன்