அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Thursday, April 02, 2009

புதிய நிதியாண்டு வாழ்த்துக்கள்...

நேற்று வந்த ஒரு குறும்செய்தி - "இனிய புது நிதியாண்டு வாழ்த்துகள்" என்றது. அட இதுக்கும் கூட குறும்செய்தியா என்று முதலில் எண்ணினாலும், பின்னர் அதன் முக்கியதுவத்தை அனுப்பியவர் விவரித்தார். (அவர் ஒரு நிதி அமைப்பு சார்ந்த உறுப்பினர் என்பது கொசுறு செய்தி)... எந்த முறையும் இல்லாதது போல இந்த முறை கடுமையான பொருளாதார குழப்பத்தில் நிதியாண்டு பிறந்துள்ளது. கணிப்பொறி சார்ந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல், கணிப்பொறி துறையை உபயோகபடுத்தி கொள்ளும் துறைகளும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. வீட்டு கடன் முதல்கொண்டு எல்லா வகையிலும் கடன் சுமை ஏறியுள்ளது... சென்செக்ஸ் ஏறியுள்ளது என்றாலும் - நெருக்கடி நிலையை பார்த்து பார்த்து - எப்போது பிரச்சனை வரும் என்ற பயமும் உள்ளது. சத்யம் நிறுவன நெருக்கடிக்கு பிறகு எந்த நிறுவனம் எப்போது விற்க்கபடுமோ, யாரால் வாங்கப்படுமோ என்ற பயமும் இருக்கிறது. புதிய நிறுவனம் வாங்கியபிறகு - அதன் சட்டதிட்டங்கள் எப்படி இருக்குமோ என்ற பயமும் கூட. அடுத்த மாதம் சம்பளம் வருமா..!! இந்த மாதமே ஆள்குறைப்பு தீவிரப்படுமா.. என்ற பயங்கள் வேறு.. நிம்மதியாக சினிமா, உணவு விடுதி போகவும் விடாமல் - கையில் இருக்கும் காசை பத்திரப்படுத்த பிரயாசைகள்..!! போன மாதம்தான் - வரி என்ற பெயரில் சம்பளமே 4 இலக்கத்தில் வந்திருக்க, கோடை தொடங்கும் காலம் - எல்லா வகையிலும் செலவு வைக்குமே..!! இப்படி பல கவலைகள் நிதி சார்ந்து இருப்பதால் - வாழ்த்துகள் + பிராத்தனைகள் மிகவும் அவசியமாக இருக்கிறது என்கிறார் அவர். அதுவும் சரிதான்...!!

No comments: