அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Thursday, April 02, 2009

49 ஓ...

காலை ஒரு மின்னஞ்சல் வந்தது - ஞானி எழுதிய ஒரு பதிவை இணைய குழுமத்துக்கு அறிமுகபடுத்தி. அந்த பதிவு "49 ஓ" என்ற சட்டம் பற்றி. நடைமுறை அரசியல் கேவலங்களால் மனம்வெதும்பும் பொதுமக்கள் யாரையும் என் தொகுதியில் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்பதை - சட்ட ரீதியாக - பதிவு செய்யலாம். எல்லா அரசியல் கழுதைகளையும் நிராகரிக்க இது சிறந்த வழி. இதன் முறையை ஞானி இவ்வாறாக விளக்குகிறார்.

"வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்ப்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்ல; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்ல வெண்டும் உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே நோட்டில், அந்தக் கையெழுத்தின் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இது தான் 49ஓவை பதிவு செய்யும் முறை. இதை செய்ய கூடாது என்று நம்மை யாரும் - சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்க்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.ஏற்கனவே நரேஷ் குப்தா, தேர்தல் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் 49 ஓ பற்றியும் எடுத்துச் சொல்ல சென்ற தேர்தலின்போதே உத்தரவிட்டிருக்கிறார். அதனால் எந்த தேர்தல் ஊழியரும் இது எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. தவிர, இந்த முறை சமூக ஆர்வலர் அ.கி. வேங்கடசுப்பிரமணியன் தேர்தல் ஆணயத்திடம் கொடுத்த மனுவின் பேரில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 49 ஓ பிரிவு பற்றிய சுவரொட்டியும் இடம் பெற இருக்கிறது".

மேலும் விவரங்கள்:
http://en.wikipedia.org/wiki/49-O

அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய உரிமை இருப்பது போலவே, வாக்காளர்களாகிய நமக்கும் 49ஓ என்ற சட்டபூர்வமான உரிமை பற்றி பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது.என்ன செய்தாலும் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆடும் அரசியல்வாதிகளுக்கு ஆணி அடிக்க... ஒன்றுபடுவோம் தோழர்களே..!!

2 comments:

மண்குதிரை said...

thankyou for your info

Comicology said...

முத்துகுமார் நண்பரே, 49 ஓ பற்றிய தகவல்கள் சில காலமாகவே வெளி வந்த வண்ணம் இருக்கின்றன, ஆனால் அதை ஓட்டு பூத் ஏஜெண்டுகள் இந்த முறையாவது புரிந்து கொள்வார்களா, என்று பார்ப்போம். வாய்ப்பு கிடைப்பின் அதை பதிய நான் ஆர்வம் காட்டுவேன் என்பதில் ஐயமில்லை.

கூடவே, காமிக்கியல் வலைப்பக்கத்தில் நீங்கள் தொடருபவராக சேர்ந்ததில் மகிழ்ச்சி. கூடவே உங்கள் கருத்துகளையும் அங்கு வெளியிடப்படும் காமிக்ஸ் சம்பந்தபட்ட பதிவுகளில் கண்டால் இன்னும் இன்புறுவேன்.

வாழ்க வளமுடன்

காமிக்கியல் & ராணி காமிக்ஸ்