6 மாதங்கள் முன்பு வரை நானும் மொபைல் போனில் அதிக நேரம் பேசி கொண்டுதான் இருந்தேன். யாரேனும் ஒருவர் ஏதாவது காரணத்துகாக கூப்பிடுவதுண்டு - நானும் பலரை அழைப்பதுண்டு. சில நேரம் அலுவலக பணிகள் - பல நேரம் நண்பர்கள்... அப்புறம் ஒருநாள் வந்தது அந்த காது வலி... முதலில் "LG 2500- ." ஒரு சிறிய வகை மொபைல் உபயோகபடுத்தும் போது அதிகம் காது வலி வந்ததில்லை. அதனை கிட்டதட்ட 2 வருடம் உபயோகபடுத்தினேன்.. பின்னர் ஒரு "Nokia 6233" .. சில நேரம் இயர்-போன் உபயோகபடுத்தினாலும் பல நேரம் நேரடியாக காதில் வைத்து பேசுவதுண்டு.. காது வலி என்பது காது, தொண்டை மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற வலி... பின்னர் இயர்-போன் போட்டு பாட்டு கேட்டாலும் வலிக்க ஆரம்பித்தது. பர்கிட் ரோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவரை சந்தித்தோம் நானும் நண்பரும். சில நிமிட பரிசோதனைகளுக்கு பிறகு அவர் சொன்ன ஒரே மருந்து - "மொபைல் போனில் பேசாதீர்கள் - அப்படி அவசியம் பேச வேண்டும் என்றால் ஸ்பீக்கர்போனில் பேசலாம் - நேரடியாக காதில் வைத்து பேச வேண்டிய விஷயம் என்றால் குறைந்த நேரத்தில் பேசி முடிப்பது நல்லது. மொபைல் போனில் பேசுவதை விட - வாய்ப்பு இருந்தால் டெலிபோனில் பேசுவது நல்லது... " - இவற்றை கடைபிடிக்க தவறினால் பின்னர் பிரச்சனைகள் பெரியதாகலாம் - காது முழுவதும் கேட்காமல் போகலாம் - அதீத தலைவலி வரலாம் - Etc, Etc... அவர் சொன்ன ஆலோசனைகளை கடைபிடிக்க ஆரம்பித்த பின்னர் காது வலி வருவதில்லை.. இன்றைய சூழ்நிலையில் நிறைய பேரை சாலையில் FBI ஏஜெண்ட் போல காதில் இயர் போனோடுதான் பார்க்கிறேன். நிறையபேர் பேசிகொண்டு போகிறார்கள்..(பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கிறது - யார் பெற்ற பிள்ளையோ..!!) இன்னும் பலர் FM அல்லது MP3 பாட்டு (அப்படி என்ன இசை ஆர்வமோ தெரியவில்லை..!!) .. இன்றைய மொபைல் போன்கள் அவற்றின் அடிப்பவை பயன்பாடு தாண்டி நிறைய வசதிகளை வழங்குகின்றன.. ஆனால் தரம் இறங்கிவிட்டது. மொபைல் போனில் ஸ்பீக்கர் சத்தம் - எல்லா "Mode"களிலும் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று ஒரு கணக்கு விகிதம் உண்டு. ஆனால் எந்த மலிவு விலை (சைனா , கொரியா மொபைல் போன்கள் - மலிவு விலையில் பர்மா பஜாரிலும், சத்யா பஜாரிலும் விற்க்கபடுவதுண்டு) மொபைல்போனிலும் இவை கடைபிடிக்கபடுவதில்லை. "Nokia" "LG" "Samsung" போன்ற முண்ணனி நிறுவனங்கள் கூட ஸ்டைலுக்காக அறிமுகபடுத்தியுள்ள எந்த மொபைல் போனிலும் விதி மீறல் உள்ளதை மறுத்ததில்லை. நெடுநேரம் காதில் வைத்து பேசுவது, இயர்-போனில் பேசுவது, இயர்-போனில் பாட்டு கேட்பது, ஐ-பாடில் பாட்டு கேட்பது - எல்லாம் மெல்ல மெல்ல செவித்திறனை குறைத்து, காதில் வலி, தலை வலி ஆகியவற்றை கொண்டு வருகிறது. சின்ன சின்ன தினப்பேச்சுகளை முடிந்தவரை இண்டர்காமில் பேசலாம். அல்லது எழுந்து போய் பார்த்து பேசிவிட்டு வரலாம் (ஒரே கட்டிடத்தின் இரு வேறு பகுதிகள் என்றால்). நண்பர்களுடன் பேச நேரம் அமைத்து கொண்டு (அவர்களையும் வேலைக்கு மத்தியில் தொந்தரவு செய்யாமல் இருந்தது போல இருக்கும்) வீட்டில் உட்கார்ந்து ஸ்பீக்கர் போனில் நிம்மதியாக பேசலாம். வெகு அவசியமாக அழைப்புகளை குறைந்த நேரத்தில் பேசி முடிக்கலாம். பாட்டு கேட்க அமைதியான சூழ்நிலை வேண்டும்.. வீட்டில் ஸ்பீக்கர் போனிலோ அல்லது MP3 பிளேயரிலோ பாட்டு கேட்கலாம்.. முடிந்தவரை இயர் போன் உபயோகபடுத்துவதையும், காதில் போனை நேரடியாக வைத்து பேசுவதையும் தவிர்க்கலாம். உலகம் எல்லாம் ஒரு விழிப்புணர்வு பெருகிவருகிறது இந்த விஷயத்தில். விதிசெவி இரண்டும் வேலவர் காக்க - என்று சாமி கும்பிட்டு கொண்டு இருக்காமல் நாம் கொஞ்சம் புத்திசாலிதனமாக இருந்தால் - நமக்குதான் நல்லது.
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல பதிவு.. நண்பா..
இப்பல்லாம் நிறைய பேருக்கு சரியா காதே கேட்பதில்லை.
இதான் காரணம்போல
Post a Comment