அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, September 18, 2005

சலூன் ஞாபகங்கள்

சலூன்கள் வாழ்வின் சில முக்கியமான நிமிடங்களை நினைவுறுத்துகின்றன. நான் சின்ன வயதில் இருக்கும்போது ஒரு முடிதிருத்துபவர் வீட்டுக்கே வருவார். காலையில் 6 மணிக்கு எழ வேண்டும். கொசு கடிக்கும் வீட்டு பின் தோட்டத்தில் அவர் முடி வெட்டி விடுவார். ஸ்டைல் எல்லாம் கிடையாது. ஒரே வகையான அலங்காரம்தான் அவருக்கு தெரியும். அதற்க்கு பின்னால் சில வருடங்களுக்கு பிறகு, பள்ளி இறுதிகாலங்களில் சதுரங்கபூம்பட்டிணத்துக்கு சைக்கிளில் சென்று வருவேன். சினிமாவும், காதலும் அறிமுகமாக தொடங்கியிருந்ததால் தலைமுடிக்கும் ஸ்டைல் தேவைப்பட்டது. எப்படி வெட்டினாலும் உள்ளதுதான் இருக்கும் எனினும் ஆசை யாரை விட்டது. அவர் பருமனாக இருப்பார். கசாப்புகடைக்காரர் போன்ற மீசையும் உருவமும். ஆனால் குழந்தைபோல இனிமையானவர். கேட்டதுபோல செய்வார். அதுதவிரவும் ஊர்விட்டு தள்ளி இருக்கும் இன்னொரு கடையும் உண்டு. அது சில நேரங்களில் மட்டும். சுவற்றில் அரைகுறை அந்தகால நடிகைகள், ஜெமினி சினிமாவின் கட்டிங், படிக்ககாத்திருக்கும் பத்திரிக்கைகளில் சினிமா எக்ஸ்பிரஸ், பிலிமால்யா. பொதுவாக முடி திருத்திகொள்ள அங்கே வருபவர்களை காட்டிலும், இவற்றை எல்லாம் ரசிக்க வரும் நபர்களே அதிகம். மீசை அரும்பிய பருவத்தில் இருந்த எங்களை யாரும் பெரியதாக கண்டுகொண்டதில்லை. இன்றும் சலூன்களில் பெருத்த மாறுதல்கள் இல்லை. விசாலமான கண்ணாடிகள் அதிகமாகியிருக்கின்றன. சுவற்றில் நடிகைகள் இல்லை, மாறாக குமுதமும், குமுதம் ஸ்டாரும், ஆனந்த விகடனும், வாரமலரும், குடும்ப மலரும். சில கடைகளில் டைம் மற்றும் இந்தியாடுடே. ரசிக்கும் படியான விஷயங்கள் குழந்தையை கூட்டுவரும் அப்பாமார்கள். அது அழும், சமாதானபடுத்தவேண்டும். விளையாட்டு காட்டவேண்டும். முரண்டுபிடிக்கும், வழிக்கு கொண்டுவர அல்பதனமாக கொஞ்சவேண்டும் - இல்லாவிட்டால் ஊரை கூட்டிவிடும். ஜாலியான விஷயம் என்றாலும் அவர்கள் அசடுவழிவதை காண கண் வேண்டுமய்யா. அரசியல், சினிமா, சூரியன் எப்.எம், சின்ன பாட்டில் ஷவர், படிகாரகல், ஸ்பிரே, சுழலும் பிரமாண்ட நாற்காலி, கண்ணாடிகளில் உள்-கோணங்கள், காத்திருக்கும் நேர டீ.... சலூன் சுவஸ்ரஸ்யமானதுதான்.

1 comment:

Sundar Padmanaban said...

தற்செயலா நானும் இதே டாபிக்ல இப்பத்தான் எழுதிருக்கேன். :)

டயம் கிடைச்சா பாருங்க
http://agaramuthala.blogspot.com/

அன்புடன்
சுந்தர்