அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, September 05, 2005

சில நேரங்களில்

பெரு நகரங்களின் வாழ்க்கை சூழல் சுனாமியாய் மனித வாழ்வின் நிமிடங்களை சுழற்றும் போதிலும், ஊர் ஞாபகங்கள் வீட்டு தாழ்வாரத்திலலும் திண்ணையிலும் தேங்கி நிற்க்கும் மழை நீர் போல சில நேரங்களில் சலனமிக்கிறது. பாட்டி, வார சந்தை, வருட பொங்கல், தேர் விழா,
ஐய்யானார் பூஜை, கோழி சண்டை, ஓட்டு பள்ளி கூடம், தமிழ் அய்யா, கணக்கு வாத்தி, முட்டி கிழிந்த சண்டை, அய்யர் வீட்டு வத்சலா அக்கா,
தண்ணி துப்பாக்கி, பஞ்சாயத்து ரேடியோ, டூரிங் டாக்கிஸ்...அப்புறமும் எத்தனையோ... என் மகனுக்கோ, மகளுக்கோ இந்த விஷயங்கள் எந்த
ஆவனத்திலும் இருக்காதோ...

கண் முன்னே
முகம் தொலைத்த கிராமங்கள்
சன் டீவில் ஆழ்ந்து...

2 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

தற்பொழுதுள்ள குழந்தைகள் எல்லாம் அதுபோன்ற இனிய நிகழ்வுகள் கிடைக்க கொடுத்து வைக்காதவர்கள்.



இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Anonymous said...

வெத்துப் புலம்பலுக்காக ஒரு வலைப்பதிவா? பேண்ட்வித்தை வேஸ்ட் பண்ணாதே மேன்!