அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 05, 2007

செக்ஸ் கல்வி

பெரும்பாலருக்கு செக்ஸ் கல்வி பற்றிய அறிவு என்பது புஜியம் என்று நினைக்கிறேன். பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பேசும் பெற்றோரை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது. செக்ஸ் கல்வி என்பது எப்படி செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல - அதல்லாம் சொல்லி கொடுத்து வருவது இல்லை. முறையான செக்ஸ் என்ன, பாதுகாப்பு என்ன, சுயம் அறிதல் என்ன, சுகாதாரம் என்ன, உடல் உறுப்புகள் என்ன என்பதனையும் ஆணுக்கு பெண் பற்றியும், பெண் ஆண் பற்றியும் ஒரு அறிவும் கொடுப்பதுதான் செக்ஸ் கல்வி. கேட்டால் அதுதான் டிவியும் சினிமாவும் சொல்லி கொடுக்கிறதே என்கிறார்கள் - மார்பும் இடுப்பும் குலுக்கி ஆடும் ஆட்டமும், கட்டி பிடித்து உரசி கொள்வதும்தான் செக்ஸ் என்றால் - குழந்தை பிறப்பு என்பது கொக்கு கொண்டு வந்து போடும் விஷயம் என்ற அளவில்தான் செக்ஸ் அறிவு மக்களுக்கு இருக்கிறது என்று பொருள். 8ஆம் வகுப்பில் உடல்கூறு கல்வி என்று ஒரு விஷயம் அறிவியலில் இருக்கிறது - பல வாத்தியார்கள் அதனை கற்பிப்பதில்லை. செக்ஸ் பெரும்பாலருக்கு முறையற்ற வழியில்தான் அறிமுகம் ஆகிறது - தெளிவனா அறிவு இல்லாமலேயே , பல பெண்கள் ஆர்கஸம் என்றால் என்ன என்று தெரியாமலேயே, பெறும் பாலான ஆண்கள் தங்கள் திருப்தி அடைந்தவுடனே தூங்கி... குழந்தை பெற்றும் கொள்கிறார்கள் - அட ஏதாவது படித்தால்தானா ஏதாவது முழுசாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் - காம சூத்திரா புத்தகம் வாங்க வெட்கபடுகிறவர்கள், முக்குகடையில் சிவப்பு நாடாவும் மஞ்சள் நிலவும் வாங்குகிறார்கள். எது செக்ஸ் என்பதிலேயே குழப்பம் இருப்பதாக படுகிறது எனக்கு. செக்ஸ் உடம்பு கிடையாது - ஆரோக்கியமான மனதுதான் என்றால் யாருக்கும் புரிவதில்லை. உடல் உறுப்புகள் வெறும் எலும்பும் சதையும்தான் - மனசு ஆரோக்கியமான செக்ஸால் சூழப்படும்போதுதான் அது முழுமையான செக்ஸை கொண்டுவருகிறது. மனசு இல்லாத வெறும் கிளர்ச்சி என்பது ஒரு வகை வன்முறை. இந்த லட்சணத்தில் முறையான ஒரு அறிவு கொடுக்க தடை விதித்து சங்கம் வைக்கிறார்கள் - எதை அல்லது யாரை பாதுக்காகிறார்கள் என்றே தெரியவில்லை. கலாச்சார பாதுகாப்பு கடை விரித்து தெருவில் போகும் பெண் புடவை விலகினால் கூட வெறித்து பார்க்கும் அறிவு இல்லாத எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள். பெண்ணின் மாத பிரச்சனையை கூட செக்ஸாக கருதும் அளவுக்கு - ஒரு நாப்கின் வாங்க கூட ஆண்கள் அதிகம் இல்லாத மருந்து கடையை நாடும் அளவுக்கு குழப்பம் இருக்கிறது. வாய் கிழிய பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை - முதலில் செக்ஸ் கல்வி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் பின்னர் அதை பற்றிய கருத்துகள் வரட்டும். ஆரோக்கியமான உடல் நலமும் மன நலமும் வேண்டும் என்றால் எதுவும் முறையாக தெரிந்து கொள்ளட்டும். பத்திரிக்கைகளும் பிற ஊடகங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் - வெறும் வியாபாரத்துக்காக மோதவிடுதலில் யாருக்கும் நல்லது இல்லை.

2 comments:

ஜமாலன் said...

நண்பருக்கு.. சுந்தரின் பின்னோட்டங்கள் வழியாக இங்கு வந்தேன். உங்கள் எழுத்துக்கள் இதை எழுத தூண்டின.

குறிப்பாக 'கற்றது தமிழ்' மற்றும் இந்த பதிவு. உங்களது சிந்ததித்தலின் ஆரோக்கியம் பற்றிய அடையாளங்கள் இவை. இவை குறித்து நானும்கூட எழுதி உள்ளேன். சில புள்ளிகள் மாறுபடலாம். ஆனால் வேறுபாடுகள் இல்லை என்றே கருதுகிறேன். எனது 'உடல் அரசியல்' என்கிற பதிவில் பாலியல் பற்றிய சில கருத்துக்கள் உள்ளன. எனது மற்றொருப் பதிவான மொழியும் நிலத்திலும் 'கற்றது தமிழ்' பற்றி எழுதி உள்ளேன். எனது எழுத்துக்கள் அரசியல் வகைப்பட்டவை என்ற வகையில் நமது சொல்லுதல் முறைகளில் வேறுபாட உண்டு. இருப்பினும் உங்கள் எழுத்துக்களின் வெளிப்படும் மென்மை உங்களிடம் இந்த உரையாடலை நிகழ்த்துகிறது. உங்கள்பதிவுகள் எல்லாவற்றையம் வாசிக்க தூண்டும் எழுத்து. பதிவுப்பணி தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜமாலன்.

G.Muthukumar said...

நன்றி ஜமாலன். உங்கள் எழுத்துகளை நான் படித்து வருகிறேன்.. விவாதம் செய்ய நமக்கு நிறைய கருத்துகள் உள்ளன.. நாம் நீண்ட தொடர்பில் இருப்போம் என நம்புகிறேன்..