அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, July 30, 2006

கும்பகோணம்..

சென்ற வாரம் கும்பகோணம் / திருநாகேஸ்வரம் – ராகு ஸ்தலத்தில் கொஞ்சம் பூஜை மற்றும் விஷேசங்கள். நல்ல கோவில் அது – தவிலுக்கும் நாதஸ்வரத்துக்கும் பயிற்சி பள்ளி இருக்கிறது. அற்புதமான இசை கோவிலுக்கு நல்ல உணர்வை கொடுக்கிறது. குளத்தை சுத்தமாக பராமரிக்கிறார்கள். சின்ன கோவில் எனினும் நல்ல பராமரிப்பு இருப்பதால் நல்ல அனுபவம். கும்பகோணம் டிகிரி காப்பியும், திருநாகேஸ்வரத்தில் பவண்டோவும் என் விருப்பங்கள் – இந்த முறையும் குறைவின்றி நிறைவேறியது. சென்னையில் அடாவடி பெண்களை பார்த்து பார்த்து… கும்பகோணத்திலும் திருநாகேஸ்வரத்திலும் அழகான தலை நிமிராத பெண்களை பார்த்ததும்… மனசு பிடித்து போயிற்று. அந்த ஏரியாவில் எனக்கு பெண் எடுப்பார்களா என்று தெரியவில்லை.

2 comments:

இரா.மோகன் காந்தி said...

கும்பகோணம் டிகிரி காப்பி அட அட அதன் சுவையை இன்று நினைத்தாலும் இனிக்கிறது

macmohan said...

மனதிற்க்கு பிடித்த கும்பகோணம் பெண் அமைய வாழ்த்துக்கள்.
- கோவை