அலுவகத்தில் இருந்து திரும்பி வரும்போது நண்பர் நரசிம்மனும் நானும் இன்றைய சினிமா பாடல்கள் பற்றியும் பாடல் புரியாத இசை பற்றியும் பேசிக்கொண்டு வந்தோம். சில பாடல்கள் மட்டும் காலம் கடந்து நிற்கிறது என்பது இருவரும் ஒத்து கொண்ட விஷயம். ஆனாலும் திரைப்படம் மனதில் நிற்பதில்லை. காரணம் திரைப்பாடல்களில் சில நேரங்களில் நாம் நம்மையே பொருத்தி கொள்கிறோம். அற்புதமான வெஸ்டன் இசையை எங்கோ கிராமத்தில் இருந்து வந்த இளையராஜா எத்தனையோ திரைப்பாடல்களில் பொருத்தி நம்மை மறக்க செய்கிறார்...எப்போதும்.. எனினும் அவரது கிராமிய பாடல்களின் ஈரம் பழைய நினைவுகளை தூண்டுவதை தவிர்க்க முடிவதில்லை.
அற்புதமான கவிதைகள் இன்று மட்டுமே எழுதபடுபவை இல்லை. திருவள்ளுவரும் ஆண்டாளும் எழுதிய கவிதைகள் படியுங்கள்.. காதல் எனும் உணர்வு பற்றி நிறைய சொல்லி தந்தவை அவை. திருக்குறளின் களவியலில் சில குறள்கள்....
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்
பொருள்: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடு! யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே..!
நெஞ்சத்தார் கத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து
பொருள்: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கிறார். ஆகையால், சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணி சூடான பொருளை உண்ண அஞ்சுகிறோம்.
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்க லுறுவதொன்று உண்டு
பொருள்: நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்கு சொல்லகூடிய செய்தி ஒன்று இருக்கிறது.
முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு
பொருள்: அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தை போல, காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கியிருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
வள்ளுவர் அற்புதமான காதலர் எனலாம்.. எனவே இக்கால கவிஞர்கள் சொல்லும் காதல் எல்லாம் ஏறத்தாழ சொல்லபட்ட கவிதைகளின் வழிமொழிதலே எனலாமா...?
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment