அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, August 22, 2011

மனசின் பயணம் ...

நான் துடியலூரில் இருக்கிறேன். வாரம் ஒருமுறையாவது இங்கே வந்து விடுவது வாடிக்கை. அது திங்கள்கிழமை எனில் ஒரு குதூகலம் உண்டு. காரணம் - துடியலூர் சந்தை. சின்ன சந்தைதான் எனினும் மதியம் 4 மணிக்கு மேல் 8 மணிவரை கூட்டதுக்கு குறைவிருக்காது. எல்லாம் கிடைக்கும் - சல்லீசான விலைதான், அளவும் ரொம்ப சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. சந்தைக்கு என்று ஒரு அலாதி வாசம் உண்டு. அந்த சந்தையின் வாசத்துக்காகவே அந்த வழியாக வர மனது துடிக்கும். மாம்பழமும், கருவாடும், மசாலா பொருட்களும், பலாப்பழமும் .. கலந்து வரும் வாசம் மனசை திங்களூருக்கு - 2 வகுப்பு காலத்துக்கு கூட்டி செல்வதை தடுக்க முடிவதில்லை. மனசின் பயணம் எதைத்தான் விட்டுவைக்கிறது.

1 comment:

கோவை நேரம் said...

துடியலூர் சந்தை எனக்கும் பிடிக்கும்.திங்கள் அன்று கூடும் சந்தையில் வாங்க வருவதால்.என்னதான் கோவை சிட்டி என்றாலும் கிராமத்தின் இயல்பு மாறாமல் இருப்பது இங்குதான்