அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, September 05, 2005

செப்டம்பர் 21ல்

செப்டம்பர் 21ல் இருந்து ஜாகை மாற்றம். பெருநகரங்களின் வாழ்க்கை சுழலில் நுழையும் மனதும் உடம்பும். சென்னை புதிதல்ல எனினும்,
கோவைக்கு ஒப்பிடும்போது கொஞ்சம் வேறுபாடு புரிகின்றது. நண்பர்கள் உண்டு, தொழில் உண்டு, வாழ்க்கை மட்டும்... அதன் போக்கில்.
அடுத்த பரிணாமம் எல்லா வகையிலும் தேவை...அதற்க்கான காலம் அமைய கொஞ்சம் மெனக்கெட வேண்டும். செய்வோம்... அது தவிர,
படிக்கவும் - எழுதவும் - பார்க்கவும் - பழகவும் நிறைய நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அவ்வண்ணமே நடக்க கடவ... :)

இளையராஜாவின் திருவாசகம்...

இளையராஜாவின் திருவாசகம்...கண் மூடி கேளுங்கள். உயிர் உங்களிடம் இருந்து உருகும். மெல்லிய முன்னிரவில், நிலவு காய, தென்னை
மரங்களோடு, மனம் கொண்ட துணையோடு, கண் மூடி... ஒரு தியானம் போல, கேட்க கேட்க... உயிர் நம்மில் என்ன வடிவம் என்பது
புலனாகிறது. பொதுவில் இசை ரசனை என்பது காலத்தோடு சேர்ந்தது. சில வகை இசை மட்டுமே காலம் தாண்டியும் ஜீவிக்கலாம். திருவாசகம்
அப்படி ஒன்று. மெல்லிய இலை ஒன்று காற்றில் லயத்தோடு பறக்கும் லாவகம் இசை ரசிக்கும்போது வருமேயானில் ஜீவிதம் புனிதமாகிறது.ஓதுவாரின் திருவாசகம் ஆன்மீக சாரல், இசை கொண்ட இந்த திருவாசகம் மனசு நிறைய மட்டும்.

பணம் இன்றைய உலகில்

பணம் இன்றைய உலகில் நிறைய விளையாடுகிறது.. செய்யும் தொழிலின் நேர்மையும்...அதின் நேர்த்தியும் பணத்தின் முன் காணாமல் போகிறது.நிறைய பணம் என்பது குறிகோளாகி, திறமையான தொழில் என்பது வெறும் வார்த்தை பிரயோகமாகிவிட்டது. பணம் தேடாதவனை "பிழைக்க
தெரியாதவன்" என்று சொல்வதில் யாருக்கும் குற்ற மனப்பாண்மை இல்லை. படிப்பு, தொழில் எல்லாமே பணம் சார்ந்தது. எனில் திறமை மட்டும்
கொண்டவன் பிழைக்க வழி...சமூகம் வழிகாட்டுகிறது. குற்றங்கள் பெருக பெருக..படித்தவனின் திறமை பயத்தை விளைவிக்க தொடங்க..சமூகம்
அவனுக்கு மரியாதை கொடுக்கிறது...ஒருவன் வாழ்க்கை அடுத்தவருக்கெல்லாம் சரித்திரம். இன்னும் எத்தனை காலங்களோ.. யார் யாரும் இங்கே
சாட்சிகளாக மட்டும்...

வாழ்வின் பெண்கள்

கமல் தன் வாழ்வின் பெண்கள் பற்றி பேசியிருந்தார்.பெண்கள் இல்லாத உலகம் கற்பனை செய்ய முடியாத ஒன்று என்றார். இதுவரைக்கும் நான் கடந்து வந்த பாதையில் திரும்பி பார்க்கும் போது அவருடைய கருத்து ஒத்து கொள்ளதக்கது. 1ஆம் வகுப்பில் அரைகுறை நினைவுகளுடன் படித்த தனலட்சுமியிலிருந்து, கல்லூரியில் கூட படித்த நாகரத்தினம்...அப்புறம் (தற்போது சண்டிகரில்) வேலை பார்க்கும் சிந்துஜா, சில நாட்களே உடன் பணிபுரிந்த அபிராமி வரை, புதியதாக சேர்ந்து என்னுடன் வேலை பார்த்து கொண்டிருக்கும் ஒரு மதுரைக்கார பெண் லில்லி தெரஸா வரை.. நல்ல நட்பான பெண்கள் நிறைய உண்டு.

அப்புறம், பள்ளி இறுதி கால நாட்களில் நெருக்கம் கொண்ட சில (Special) தோழிகளும் உண்டு. கல்லூரியிலும் உண்டு. வேலை செய்யும் காலங்களிலும் உண்டு. மனசு எல்லாரையும் ஒரே தட்டில் வைப்பதில்லை. இனம் புரியாமல் அது சலனப்படுபோது, ஒவ்வொருவருக்கும் அதுவே
தனித்தனியான தட்டில் அமைக்கிறது. மனசு ஊஞ்சல் என்றார் சுகி.சிவம். ஒரு நிலைப்பாட்டுக்கு வரும் வரை ஆட்டம் கொண்டுதான் இருக்கும்.அதன் போக்கில் விட்டு கட்டுபாடு அடையும் போது நிறைவான கட்டுபாடு சாத்தியமாகிறது. இது இருபாலருக்கும் பொது என்கிறார் சத்குரு
ஜக்கி வாசுதேவ்.ஆதலனினால் நண்பர்களே..சஞ்சலத்தை சஞ்சலத்தோடு அணுகாதீர் !!!!

மஞ்சள் நிறத்தில் ஒரு கோடு...

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறோம்... என்ன செய்வது... முதல் காரணம் இந்திராகாந்தி பல்கலைகழகத்துக்கும் எனக்கும் உள்ள அசைக்க முடியாத பந்தம்... அப்புறம் அலுவக காரணங்கள்... இனிமேல் தொடர்ச்சியாக எழுத முடிவெடுத்துள்ளேன்.. இது ஒரு வகையில் மனதை திருப்திபடுத்துவதான உணர்வுதான் அதற்க்கான காரணம்... கொண்ட வேலைகளுக்கு மத்தியில் ஒரு பொழுதுபோக்கு, யாரையும் தொந்தரவு
செய்யாமல்.


சமீபத்தில் நண்பர்களுடனான ஒரு விவாதத்தில் "Yellow Line Friendship" எனப்படும் ஆண்/பெண் நண்பர்களுடனான நட்பு பற்றி பேசினோம். இது இப்போது உள்ள சமூகத்தில் பரவலாகி உள்ளது. தோழமை தாண்டிய நெருங்கிய உறவுமுறை... ஆனால் எல்லைகள் கொண்ட
நட்பு... என் பெண் நண்பர்கள் சிலர் "Yellow Line" அமைப்பில் உள்ளனர்... எங்களுக்குள் நெருக்கம் உண்டு... எல்லைகளும் உண்டு... ஒரு நண்பர் கேட்டார்... என் பெண் நண்பர்களுடனான உறவு.. " உடல் சார்ந்த ஈர்ப்பா.." .... நான் சொன்னேன்.. "மனம் சார்ந்த ஈர்ப்பு... " .. "இதில் உடல் பங்கேற்பதில்லையா.. "... " மனதை விட குறைவான பங்குதான்.. " ... " அப்போ.. இது காமமா..
காதலா.. "... " நட்பை விட உயர்ந்த.. காதலை விட உயர்ந்த... காமத்தை விட உயிர்ப்பான.. உணர்வு... " "தோளில் சாய்ந்து கொள்வதையும்... கைகளை கோர்த்து கொள்வதையும்... இடுப்பை அணைத்து நடப்பதும்... உம் கண்களுக்கு காமமேயெனில்... விளக்கம்
ஒன்றுமில்லை.... என் பார்வைக்கு... இது நட்பு சார்ந்த ஆளுமை... யாரும் யாரையும் கட்டாயபடுத்துவதில்லை... விருப்பம் கொண்டவர்களிடம் மட்டுமே உள்ள உறவு இது... " அப்புறம் இது பற்றி பேச பெரிய ஆர்வம் யாரும் காட்டவில்லை...பின்னர் ஒரு முறை
கேள்வி கேட்ட நண்பரை ஒரு Java Green Cafeல் அவருடைய தோழியுடன் பார்த்தபோது அவர் புரிந்து கொண்டிருந்தது புரிந்தது. எனினும் யாரும் சுலபத்தில் ஒத்து கொள்வதில்லை. அப்படி இருப்பவர்களையும் சமூகம் கவனிக்கும் தொனி ஒரு காரணம் என்பது என் கருத்து.