"வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்ப்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்ல; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்ல வெண்டும் உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே நோட்டில், அந்தக் கையெழுத்தின் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இது தான் 49ஓவை பதிவு செய்யும் முறை. இதை செய்ய கூடாது என்று நம்மை யாரும் - சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்க்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.ஏற்கனவே நரேஷ் குப்தா, தேர்தல் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் 49 ஓ பற்றியும் எடுத்துச் சொல்ல சென்ற தேர்தலின்போதே உத்தரவிட்டிருக்கிறார். அதனால் எந்த தேர்தல் ஊழியரும் இது எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. தவிர, இந்த முறை சமூக ஆர்வலர் அ.கி. வேங்கடசுப்பிரமணியன் தேர்தல் ஆணயத்திடம் கொடுத்த மனுவின் பேரில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 49 ஓ பிரிவு பற்றிய சுவரொட்டியும் இடம் பெற இருக்கிறது".
மேலும் விவரங்கள்:
அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய உரிமை இருப்பது போலவே, வாக்காளர்களாகிய நமக்கும் 49ஓ என்ற சட்டபூர்வமான உரிமை பற்றி பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது.என்ன செய்தாலும் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆடும் அரசியல்வாதிகளுக்கு ஆணி அடிக்க... ஒன்றுபடுவோம் தோழர்களே..!!