அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Wednesday, May 25, 2005

காதல் கவிதைகள் புதுசா..

அலுவகத்தில் இருந்து திரும்பி வரும்போது நண்பர் நரசிம்மனும் நானும் இன்றைய சினிமா பாடல்கள் பற்றியும் பாடல் புரியாத இசை பற்றியும் பேசிக்கொண்டு வந்தோம். சில பாடல்கள் மட்டும் காலம் கடந்து நிற்கிறது என்பது இருவரும் ஒத்து கொண்ட விஷயம். ஆனாலும் திரைப்படம் மனதில் நிற்பதில்லை. காரணம் திரைப்பாடல்களில் சில நேரங்களில் நாம் நம்மையே பொருத்தி கொள்கிறோம். அற்புதமான வெஸ்டன் இசையை எங்கோ கிராமத்தில் இருந்து வந்த இளையராஜா எத்தனையோ திரைப்பாடல்களில் பொருத்தி நம்மை மறக்க செய்கிறார்...எப்போதும்.. எனினும் அவரது கிராமிய பாடல்களின் ஈரம் பழைய நினைவுகளை தூண்டுவதை தவிர்க்க முடிவதில்லை.

அற்புதமான கவிதைகள் இன்று மட்டுமே எழுதபடுபவை இல்லை. திருவள்ளுவரும் ஆண்டாளும் எழுதிய கவிதைகள் படியுங்கள்.. காதல் எனும் உணர்வு பற்றி நிறைய சொல்லி தந்தவை அவை. திருக்குறளின் களவியலில் சில குறள்கள்....

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

பொருள்: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடு! யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே..!

நெஞ்சத்தார் கத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து

பொருள்: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கிறார். ஆகையால், சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணி சூடான பொருளை உண்ண அஞ்சுகிறோம்.

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்க லுறுவதொன்று உண்டு

பொருள்: நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்கு சொல்லகூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு

பொருள்: அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தை போல, காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கியிருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

வள்ளுவர் அற்புதமான காதலர் எனலாம்.. எனவே இக்கால கவிஞர்கள் சொல்லும் காதல் எல்லாம் ஏறத்தாழ சொல்லபட்ட கவிதைகளின் வழிமொழிதலே எனலாமா...?

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...

Tuesday, May 24, 2005

நல்ல சினிமா...

நல்ல சினிமா பற்றிய குழப்பங்கள் இன்னும் நிறைய பேருக்கு இருக்கின்றன. சினிமா பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்க்கான காரணம் என்பது என் கருத்து. பலருக்கு சினிமா இன்னும் ஒரு கவர்ச்சியான பொழுதுபோக்கு. சிலருக்கு செய்திகளையும் கருத்துகளையும் சொல்லும் ஊடகம். சிலருக்கு கலை. சிலருக்கு கனவு... சிலருக்கு
தொழில். ஒரு சாதாரண ரசிகனின் நிலையிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பொதுவில் இன்று சினிமாவின் தொழிற்நுட்பம் சார்ந்த அறிவு மீடியாக்களின் புண்ணியத்தில் கொஞ்சம் பேருக்கு இருக்கிறது. லைட்டிங், எடிட்டிங், கேமரா, காஸ்டீயும், கவிதை சார்ந்த பாடல்கள், சண்டைகள் எடுக்கபடும் முறை என பேசவாவது தெரிகிறது. எனினும் நல்ல சினிமா எது..? இந்த கேள்வியின் பதில்...!!! பல நேரங்களில் குழப்பம்தான்.

ஒரு முறை நண்பர்களுடனான விவாதத்தில் நல்ல சினிமா பழைய படங்கள்தான் என்ற கருத்து வந்தது..சிவாஜியும், எம்ஜியாரும், ஜெமினிகணேசனும் மற்றும் கருப்பு வெள்ளை கால திரைபடங்கள் மட்டுமே நல்ல சினிமா என்றார்கள்.. நான் மகேந்திரனின் உதிரிப்பூக்களையும், மெட்டி, நண்டு போன்ற படங்களை குறிப்பிட்டேன். துரதஷ்டவசமாக யாரும்
அந்த திரைப்படங்களை அறிந்திருக்கவில்லை. பாலுமகேந்திராவின் ஓடாத படங்களையும் யாரும் அறிந்திருக்கவில்லை. வியாபாரரீதியாக ஓடும் திரைப்படங்கள் நல்ல திரைப்படங்களாக ஒத்து கொள்ளபடுவதில்லை. ஓடாத படங்களே நல்ல படங்களாம்... அந்திமந்தாரை, ஹேராம், ஆறிலிருந்து அறுபதுவரை, அன்பே சிவம்... என அவர்கள் வரிசைப்படுத்தினார்கள்... இக்காலங்களில் அழகியும், ஆட்டோகிராப்பும் நல்ல திரைப்படங்களாக
ஒத்துகொள்ளபடுபவை ஆனால் எப்படியோ வசூலும் கொஞ்சம் கொடுத்தவை. நான் நிழல்கள், 16 வயதினிலே, முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே, வானமே எல்லை, இது நம்ம ஆளு, சிந்துபைரவி, மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், கேளடி கண்மணி போன்றவையும் நல்ல படங்கள் என்றேன். எல்லாவற்றிலும் கருத்தும் நல்ல திரைப்படமாக்கலும் உள்ளது. எனினும் வசூலும் கொடுத்தது. குமுதம் அரசு பதில்களில் ஒருமுறை "தேசம்"
திரைப்படம் பற்றிய ஒரு கேள்விக்கு.. " நல்ல கருத்துகளை சொல்வதற்று ஒரு திரைப்படம் தேவையில்லை என்று பதிலளிக்கபட்டிருந்தது.. " .. அப்புறம்.. மலையாளமும் பெங்காலியும் நல்ல படங்களை என்று பேச்சு திரும்பியது... ஏனோ தமிழ் படங்கள் பற்றி .... படம் பார்க்கும் முறை பற்றி தெளிவான எண்ணங்கள் எல்லை. பதேர்பாஞ்சாலி, செம்மீன் படங்களை யாரும் பார்க்காமலேயே கேள்வி ஞானத்திலேயே அவை நல்ல படங்கள் என
விளம்பரபடுத்துகிறார்கள். தமிழின் நல்ல திரைப்படங்கள் மிக சிலருக்கே தெரிந்துள்ளன. நண்பர்களுடன் ஒரு நாள் ஒரு விசிடி கடைக்கு போய் "Mr. & Mrs. Iyar" என்ற திரைப்படத்தின் விசிடி பற்றி விசாரிக்கையில்... "மலையாள செக்ஸ் சினிமா சிடி எல்லாம் கிடையாது சார்" என்றார் கடைக்காரர்.. தலையில் அடித்துகொண்டு திரும்பினோம்.
ராகுல் போஸையும், கொங்கனா சென்னையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த நான் தயாரில்லை. நான் விரும்பிய திரைப்படங்கள் பற்றி பேச நிறைய உள்ளது. பின்னர் ஒருநாள் பேசலாம்.

சரி உன் கருத்து என்ன என்று கேட்பவர்களுக்கு.. யதார்த்தமும்...வாழ்வின் அற்புதங்களையும் அனுபவங்களையும் சொல்லும் எந்த மொழி சினிமாவும் நல்ல சினிமாதான்.

அப்புறம் சமீபத்தில் படித்ததில் பிடித்தது.


ஒரு பத்திரிக்கை பேட்டி ஒன்றில் இயக்குனர் மகேந்திரன் " மனதில் எதிர்பார்ப்பும், அதற்கேற்ற வேகமும் இருக்கிறதா..? நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை அதற்கேற்ற போக்கில் செய்து கொண்டிருங்கள். அதன் விளைவு எப்படியாவது வந்துதான் தீரும். கால ஓட்டத்தில் சற்று பிந்தலாம். அவ்வளவுதான்... "

அப்புறம் சல்மாவின் கவிதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கவிதை

விபத்தில் இருந்து மீண்ட நாளின் உடை
நாம் சந்தித்து கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரண செய்தி
வந்து சேர்கையில்
என் கண்களை கவர்ந்த
சிவப்பு வண்ண கார்
வியப்பாகதானிருக்கிறது
பொருட்களின் மீது
காலம் பதிந்து நிலைபெறுமென்பது...

Monday, May 23, 2005

மீண்டும் சந்திக்கிறோம்... நெடுநாட்களுக்கு பிறகு..

பெங்களூர் பயணமும் அலுவக வேலைகளும் கைகளை கட்டி போட்டு விட்டன. பயணத்தில் சொல்ல நிறைய இருக்கிறது. நீண்ட ரயில் பயணம். ரிசர்வேஷன் செய்திருந்ததால் இம்முறை உட்கார சிரமம் இல்லை. எவ்வளவு நேரம்தான் ஜீனியர் விகடனும், குங்குமமும் படிப்பது... ரயில் ஜன்னல் ஒரு அற்புதமான புத்தகம். நிறைய படிக்கலாம். எத்தனை மனிதர்கள்....இன்னும் வயலில் உழுது கொண்டு.... இன்னும் காட்டு வேலை செய்து கொண்டு... இன்னும் சுள்ளி பொறுக்கி கொண்டு... எத்தனை குழந்தைகள் இன்னும் ரயில் செல்பவர்களுக்கு டாடா காட்டிகொண்டு.. பாவம்..

அவர்களுக்கு திரும்ப யாரும் டாடா காண்பிப்பதில்லை.. ஆனாலும் அந்த குழந்தைகள் எல்லா ரயில்களுக்கும் இன்னும் டாடா காட்டிகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் விடியாத கிராமங்கள் எத்தனையோ.. ஆனாலும் இரவில் ஏறக்குறைய எல்லா கிராமங்களிலும் டிவி அவர்களுக்கு எட்டாத நிறைய கனவுகளை காட்டி ஏமாற்றி கொண்டுதான் இருக்கின்றது. டூரிங் டாக்கீஸ் சினிமாக்களில் தங்கள் ஏக்கங்களை தொலைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்... தருமபுரி ரயில் நிலைய பிளாட்பாரமில் வடியும் குழாய் தண்ணீரை மட்டுமே குடித்து வயிறு நிரப்பி கொண்டலையும் நாடோடி கும்பல்கள்... அவர்களின் குழந்தைகளுக்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும்... என்னுடன் "Java Certification" எழுதுவதற்காக பயணம் செய்த ஒருவர்.. "இவர்களுக்கு நம்மை போல கவலைகள் இருக்கமுடியாது" என்றார்.. நமக்கு நிறைய தேவைகள்.. அதனால் கவலைகள்.. அவர்களின் தேவை தெளிவானது.. கொஞ்சம் உணவு.. அதற்க்கான உழைப்பு.. அப்புறம் குடும்பமும் குழந்தைகளும்.. ஜாவா, .னெட், லட்சங்களில் சம்பளம், அழகான மனைவி, கிரடிட்கார்ட் வாழ்க்கை, வெளினாட்டு கார், உயர்தர உணவகம், வெளினாடுகளில் வாரவிடுமுறை...எதுவும் அவர்களுக்கு கிடையாது.. எனவே.. கவலைகளுக்கும் அளவுண்டு.

பெங்களூர் ஆனந்தராவ் சர்க்கிளில் ஷீத்தல் விடுதியில் தங்கியிருந்தேன். போன வேலை முடிந்ததும்.. இரவு நேர பெங்களூர் இரு கரங்களுக்குள் என்னை அணைத்து கொண்டது. நிறைய பணம், நிறைய டெக்னாலஜி, நிறைய கவலை, நிறைய டென்ஷன், நிறைய பார்கள், நிறைய பெண்கள், நிறைய குறைபாடுகள்... அவர்களது உடையிலும் என்னுடய மனதிலும்.. இன்னும் அவ்வளவு பக்குவம் வரவில்லையோ என்று நினைப்பதுண்டு. என்ன செய்யலாம்...வயசு அப்படி...ஆனால் இன்னொரு பக்கம்... "ஆண்கள் இல்லாத உலகில் பெண்கள் இங்கனம் உடையணிவார்களோ.. ?" என்ற கேள்வி எழும்.. பெண் பார்க்க சாகசம் செய்யும் ஆணுக்கும்... ஆண் பார்க்க சாகசம் செய்யும் பெண்ணுக்கும் ... முறைகள் வேறுபட்டிருப்பினும்...காரணம்
ஒன்றுதானோ..?

ஆண் பெண் சுதந்திரம் தவறாக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது என்ற கருத்து சில நேரங்களில் புலப்படுகிறது. ஏறக்குறைய நிறைய பெண்கள் மதுபானங்களை சுவைக்கிறார்கள். ஆண் நண்பர்கள் இல்லாதது சமூககுறைபாடாக தெரிகிறது... மதுரையிலும் கோவையிலும் இருந்து புதியதான சமூகத்தில் அடியெடுத்து வைக்கும் நண்பர்கள் சுலபமாக வசப்படுகிறார்கள்.. மல்டிநேஷனல் நிறுவனங்கள் மனிதர்களை சுலபமாக பிழிந்து சாறு எடுக்கின்றன. காய்ந்த சறுகுகள் தங்களை மீண்டும் உய்வித்துகொள்ள இங்கனம் மாயவலையில் மிக சுலபமாக சிக்கி கொள்கிறார்கள். மிக சிலரே தரம் தெரிந்து தன்னை அறிந்து அடுத்த நிலைக்கு தங்களை உயர்த்தி கொள்ள ஆர்வமும் முயற்சியும் கொள்கிறார்கள். மற்றவர்களின் உடலும்
மனமும் பிழிந்து வீசப்பட்டு இருக்கிறது... அவர்களுக்கு மகிழ்ச்சி.. உயர்தல் என்பது வேறு சமூகம்...அப்பனுக்கும் பாட்டனுக்கும் கிடைக்காத சம்பளம்..தனக்கு கிடைத்தவுடன்..உலகம் காலுக்கடியில் இருக்கும் உணர்வு.. பாலகுமாரன் ஒருமுறை எழுதினார். ' பளபளக்கும் ராஜ உடைவாள்... பார்பதற்கு கம்பீரமும், கலவரம் கொடுக்கும்.. எல்லாம் கையில் எடுத்து பார்க்கும் வரைக்கும்.. கையில் எடுத்ததும் தலைக்கும் மேல் உயர்த்தி பார்க்க நினைக்கும் மனது... ' மனதின் வேகமும் தன்னிலை இழக்கும் திறனும் இதனைவிட அருமையாக யாரும் சொல்ல முடியாது. சில நேரங்களில் இது ஒரு புலம்பல் போலவும் உள்ளது... 'உனக்கு கிடைக்கல .. புலம்பற.. ' என்றும் கூட சொல்லலாம். விவாதங்களுக்கு வரவேற்ப்பு உண்டு. விமர்ச்சனங்களை எதிர்கொள்வதிலேயே தன்னையறிதல் சாத்தியப்படும்.

சாப்பிட புதியதாக ஒரு இடம் கண்டுபிடித்தாகிவிட்டது. ஒரு ஆந்திரா மெஸ்... நல்ல சுவை காரம்.. உடம்பை கெடுக்காத உணவு. NASA என்றொரு பப். புத்தம் புதிய பியர் கிடைக்கிறது.. ஆண்கள் பெண்கள்.. தண்ணீர் குடிப்பதுபோல குடிக்கிறார்கள்..பக்கத்தில் இருந்து பேசினால் கூட கேட்டாத அளவுக்கு மேற்கத்திய இசை.. வளைந்து வளைந்து ஆடும் பெண்கள்..இன்றுதான் கடைசி என்பதுபோல துடிக்கும் ஆண்களின் ஆட்டம்..2 மணி நேரம் கழித்து வெளியில் வந்து நின்றபோது...தருமபுரி ரயில் நிலைய நாடோடி கும்பல் நினைவுக்கு வந்தது... இவர்கள் அவர்களை போல வாழ முடியுமா..? அவர்கள்தான் இந்த வாழ்க்கையை நினைக்க முடியுமா..? அன்பே சிவம் திரைபடத்தில் மாதவன் கதாபாத்திரம் கிட்டதட்ட இந்த கேள்வியை
அடிப்படையாக கொண்டு அமைந்து போல தோன்றும். ஆர்வமுள்ளவர்கள் விவாதிக்கலாமே...

அப்புறம் வழக்கம் போல ஒரு கவிதை...சி.கே. ராஜாசந்திரசேகர் கவிதைகளில் இருந்து...

மழை
மழையாகவும் இருந்திருக்கிறது
கவிதையாகவும் இருந்திருக்கிறது
மனங்களுக்கு தக்கபடி...

குடைகள்
ரசிப்பதில்லை
மழையை...

ஒரு மழை நாளில்தான்
உன்னை பார்த்தேன்
அதிலிருந்து இன்னும்
தூரலாக விழுந்து கொண்டிருக்கிறாய்
மனதில்...

மழையின் முன்நேரங்கள் கூட
மழையை போலவே
ரசிக்கபட வேண்டியவை

மரங்களில்
சொட்டி கொண்டிருக்கிறது
மழையின் மழை...

நீ நடக்கிறாய்
மழை
நனைகிறது

மழை ஜன்னல்
சூடான தேநீர்
அசைபோட வைக்கும்
ஞாபகங்கள்
கணங்கள் இப்போது
கனிகளாய்...

Thursday, May 12, 2005

தமிழில் Unicode ...

தமிழில் Unicode உபயோகத்தில் எழுத ஆரம்பித்து நண்பர்களுக்கு சொன்னவுடன்... வழக்கம் போல நிறைய கேள்விகள். அவற்றில் சிலவற்றுக்கு இங்கே பதில்கள்.

1. How do I know if a given Tamil font is of Unicode kind and also includes Tamil block?

On Windows 2000/XP, you can use the "character-map" utility available within /accessories/system tools/ to look at the contents of all fonts installed in your computer. Select the font you are interested on the top and also "unicode-Tamil" as the block you want to look at. If your font is based on Unicode and has Tamil support, you should be able to see a set of all basic characters that are
defined in the Unicode Tamil block and also additional Tamil glyphs stored in the font.

2. If I prepare the text in TSCII or TAB, is there a text convertor to convert it to Unicode format?

Yes, Murasu Anjal 2000SE comes with a Text Convertor that allows you to open any TSCII or TAB or other popular Text Encodings (has even an auto encoding detection tool incorporated) and generate equivalent unicode text. Remember that, for use in Web pages, the Unicode based text must be stored in UTF-8 format.

3. How are unicode-based Tamil texts handled on the Web?

For use in the Web/Net, Unicode based texts are to be stored in the source/html files in a specific UTF-8 format. (Notepad allows you to save Unicode Texts in this UTF-8 format. So if you know how to add html tags yourself, you can prepare a Tamil webpage using Notepad alone).

4. What browsers do I need to view Unicode Tamil webpages?

Netscape browser 4.6 onwards and Internet Explorer 4 onwards are unicode-intelligent. Hence if they are used in conjunction with Win 2k/XP, they will display Tamil webpages correctly.

Because Unicode-based texts are stored in UTF-8 format, you need to set the browser also correspondingly before viewing Unicode Tamil webpages. Two things you need to do: a) select a unicode font that carries Tamil block as the default font for use with unicode encoding/char-set and b) set also the browser to display the webpage in UTF-8 format. If you have done(a), reload the page if necessary.

5. How about current support to Unicode Tamil texts in Adobe PDF?

Adobe Acrobat 4 allows you to prepare PDF files of Unicode Tamil texts without any problem. With "font embedding" option, PDF files are readable integrally in Windows 2000/XP and also in Macintosh OS 9 and X

6. What tools do I need to prepare a Unicode font with support for Tamil block elements?

Unicode fonts are of a special kind OTT (OpenTrueType) unlike 8-bit bilingual fonts used for TAB &TSCII (Truetype). Preparation of an OTT font proceeds in two distinct steps:

stage i) preparation of a TT font with all glyphs you want to include in the font using one of the Font-editing softwares that support Unicode encoding. Currently these are Font Creator, FontEdit and Fontographer. With these you can name the glyphs to have Unicode-based naming and numbering.

stage ii) preparation of glyph positioning (GPOS) and glyph substitution (GSUB) tables and bundle these along with the glyph outline files to create OTT for use in Windows. Best software for this purpose is MS VOLT, distributed free by Microsoft to registered software professionals.

ஒரு வழியாக "ழ" அமைப்பின் உதவியால், மற்றும் பல இளம் கணிபொறியாளர்களின் உழைப்பால் தமிழில் Linux வெளிவந்து விட்டது. நன்றி

வெளியில் நல்ல மழைகாற்று. கோவையில் எத்தனை வெயில் அடித்தாலும் மாலையில் சிலுசிலுவென குளிர் காற்று அத்தனையையும் மறக்கடித்து மனிதர்களை மொட்டை மாடியில் விசிலடித்து திரிய வைத்து விடுகிறது. மழை சின்ன வயதில் இருந்தே பிடித்த பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. அதிலும் மத்தியான மழைக்கு தனி சுகம் உண்டு. மண்
சூடேறி முதல் மழைத்துளி மண்ணில் விழுந்ததும் புறப்படும் மண்வாசம்.. அப்புறம் கொட்டி சிதறும் மழை.. சாலையெங்கும் நிரம்பி வழியும் மழை நீர்... மெல்லிய தூரல் கொண்ட மாலை நேரம்... இத்தனைக்கும் ஆசைபடும் மனசு. முன்னெல்லாம்.. பள்ளிகூட காலங்களின் விடுமுறையில் மழை வந்தால்... சூடாக மஞ்சள் பொடி போட்டு.. இரண்டு காய்ந்த மிளகாய்.. சீரகம்.. பூண்டு.. கறிவேப்பிலை போடு ... பொரி வறுத்து ... காரம் சுருசுருக்க.. கெட்டி
வெல்லம் தட்டி... சுக்கு காப்பி போட்டு... கால் நீட்டி உட்கார்ந்து அம்மாவும் தம்பியும் நானும் இளையராஜாவை ரசித்ததெல்லாம்.. கோடி கொட்டி கொடுத்தாலும் இனிமேல் அந்த காலம் வராது. Atleast மீண்டும் அந்த பாடல்கள் Radioவில் கேட்கும் போது பழைய நினைவுகளில் மூழ்ங்கவாவது நேரமும் பொறுமையும் இருக்கிறதே... அதற்றே காலத்துகும் நன்றி சொல்ல வேண்டும்.

பாரதியாரின் கவிதைகள் பற்றி சாயங்காலம் ஒரு தோழமையுடன் விவாதம் வந்தது.. சஞ்சலமடையும் மனதிற்கு கட்டளையிடும் பாரதியின் பாடல் ஒன்று இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். தேடி கண்டுபிடித்து படித்தவுடன்... இத்தனை நாட்கள் எப்படி கிடைக்காமல் போனது என்ற ஆச்சரியம்...

நல்ல கவிதை...

பேயா யுழலுஞ் சிறுமனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைந்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

இதுவெல்லாம் பாரதி போன்ற கலைஞனால் மட்டுமே முடியும்...

ஒருவழியாக எழத ஆரம்பித்து விட்டாயிற்று... அடுத்த கவலை ஒழுங்காக தொடர வேண்டும். நண்பர் லோகுகிருஷ்ணன் ஒரு முறை சொன்னார்.. "ஏதாவது எழுதி கொண்டே இருங்கள்.. பின்னர் பழக்கமாகிவிடும்.. அப்புறம் தானாகவே நல்ல விஷயங்களை தேடி படித்து எழுத ஆரம்பித்து விடுவீர்கள்.. " .. சொல்லபோனால் ஒரு வகையில் இது அன்றாட வேலைகளில் இருந்து Relaxation...

மீண்டும் சந்திப்போம்...

Wednesday, May 11, 2005

இலக்கியமும்..கவிதையும்...

நண்பர்களே..

மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி... நேற்று Unicode பற்றிய விளக்கங்கள் கொஞ்சம் பதித்துள்ளேன்.. உங்கள் கருத்துகள் அறிய ஆவலாய் இருக்கிறேன்.. இன்று வேறு எதாவது பேசலாம்.. கொஞ்சம் இலக்கியம்.. கொஞ்சம் கவிதைகள்.. இலக்கியம் பற்றிய விவாதங்களில் எல்லாம் தவறாமல் இடம் பெறும் ஒரு பெயர் புதுமைப்பித்தன்.. திருநெல்வேலிக்காரர். இயற்பெயர் விருத்தாச்சலம். மணிக்கொடி பத்திரிக்கையில் அறிமுகம்.. 14 ஆண்டுகள்.. சிறுகதை, கவிதை நாடகம், சினிமா, அரசியல், மொழிபெயர்ப்பு என பன்முகத் தன்மை கொண்ட கலைஞன். இலக்கியம் படிப்பவர்களுக்கு ஒரு நாடிதுடிப்பு போல புதுமைப்பித்தன்.. இயல்பான நகைச்சுவை.. வாழ்வின் வலி.. நிதர்ச்சனமற்ற வாழ்க்கை.. என தொட்டு செல்லும் எழுத்துகள்..
சமீபத்தில் வீ.அரசு என்பவர் தொகுத்த ஊழியன் மற்றும் பிற புதுமைப்பித்தன் கதைகளின் தொகுப்பு படிக்க நேர்ந்தது.. அவற்றில் ஒரு கதை.. "?" என்பதுதான் தலைப்பு.. கதை இயல்பானது.. இரண்டு முனிவர்கள் ஹிமாலய சிகர பிரதேசங்களில் நடந்து கொண்டிருக்கிறார்கள்... தூரத்தில் எட்டாத இலட்சியம் போல கைலாயம்..

குரு கண்களில் ஒளி மின்ன சொல்கிறார்.. " அதோ தெரிகிறது பார்த்தாயா .. உயர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக வானை கிழித்து கொண்டு.. கைலாயகிரி.. அதன் உச்சியில்.. வான் தகட்டில் .. சிகர திலகம் போல ஒரு நட்சத்திரம்.. பிரகாசமாக.. அது போலத்தான் இலட்சியம்.. "

பதிலளித்தான் சிஷ்யன்.. " பிரபோ.. நிமிர்ந்து நின்று என்ன பயன்.. ? உயிரற்று கிடக்கிறதே..! பிரகாசம் மட்டும் போதுமா.. ? ஒருவன் எட்டிபிடிப்பதற்க்காக அது இருந்தென்ன அல்லது கண்ணுக்கு தெரியாமல் போய் என்ன..?

குரு பதிலளித்தார்.. " ஒருவன் தொட்டால் உலகம் தொட்ட மாதிரி.. !"

"உலகம் அவனை இழந்து விடுவதனாலா..? " "இல்லை.., உலகத்தை அவன் இழப்பதனால்.... "

சில நிமிடங்கள் இருவரும் தலை நிமிர்ந்து சிகரத்தை பார்த்தபடி யோசனையிலாழ்கின்றனர்..

"இல்லை.. நான் சொன்னது பிசகு!.." என்று தலைகுனிகிறார் குரு..

கதை இவ்வளவுதான்.. எத்தனை ஆழமான கருத்து.. எது இலட்சியம்.. இலட்சியம் அடைவதன் பலன்.. என பல வகையான கருத்துகளை தூண்டும்.. கதை.. சுலபமான ஒரு பக்க கதை.. இத்தகைய ஆழமான கருத்துகள்.. இன்றைய அவசர உலகில்.. இத்தனை ஆழமான கருத்து எடுபடுமா.. என்னுடன்.. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்.. நண்பர்களே..

அப்புறம் சமீபத்தில் படித்த ஒரு கவிதை..


அது ஒரு கோடை, அல்லது
கோடை காலத்தின் முடிவு...
அப்போது நான் உன் காலடி ஓசைகளை கேட்டேன்,
கிழக்கிலிருந்து மேற்காக நீ சென்றபோது,
கடைசி தடவையாக..
இந்த உலகில் கைகுட்டைகள் தொலைந்தன..
மற்றும் புத்தகங்களும் மனிதர்களும்..

அது ஒரு கோடை, அல்லது
கோடை காலத்தின் முடிவு...
நடுப்பகல் நேரங்களில் நீ இருந்தாய்;
நீ முதல் முறையாக
உன் கோடித் துணியை அணிந்தாய்.
நீ சற்றும் கவனிக்கவில்லை..
ஏனெனில் அது மலர்களால் பின்னல் வேலை செய்யப்பட்டிருந்தது..

எஹீதா அமிக்ஹாய் கவிதைகளில் இருந்து....

மீண்டும் சந்திப்போம்..