அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, September 18, 2005

சலூன் ஞாபகங்கள்

சலூன்கள் வாழ்வின் சில முக்கியமான நிமிடங்களை நினைவுறுத்துகின்றன. நான் சின்ன வயதில் இருக்கும்போது ஒரு முடிதிருத்துபவர் வீட்டுக்கே வருவார். காலையில் 6 மணிக்கு எழ வேண்டும். கொசு கடிக்கும் வீட்டு பின் தோட்டத்தில் அவர் முடி வெட்டி விடுவார். ஸ்டைல் எல்லாம் கிடையாது. ஒரே வகையான அலங்காரம்தான் அவருக்கு தெரியும். அதற்க்கு பின்னால் சில வருடங்களுக்கு பிறகு, பள்ளி இறுதிகாலங்களில் சதுரங்கபூம்பட்டிணத்துக்கு சைக்கிளில் சென்று வருவேன். சினிமாவும், காதலும் அறிமுகமாக தொடங்கியிருந்ததால் தலைமுடிக்கும் ஸ்டைல் தேவைப்பட்டது. எப்படி வெட்டினாலும் உள்ளதுதான் இருக்கும் எனினும் ஆசை யாரை விட்டது. அவர் பருமனாக இருப்பார். கசாப்புகடைக்காரர் போன்ற மீசையும் உருவமும். ஆனால் குழந்தைபோல இனிமையானவர். கேட்டதுபோல செய்வார். அதுதவிரவும் ஊர்விட்டு தள்ளி இருக்கும் இன்னொரு கடையும் உண்டு. அது சில நேரங்களில் மட்டும். சுவற்றில் அரைகுறை அந்தகால நடிகைகள், ஜெமினி சினிமாவின் கட்டிங், படிக்ககாத்திருக்கும் பத்திரிக்கைகளில் சினிமா எக்ஸ்பிரஸ், பிலிமால்யா. பொதுவாக முடி திருத்திகொள்ள அங்கே வருபவர்களை காட்டிலும், இவற்றை எல்லாம் ரசிக்க வரும் நபர்களே அதிகம். மீசை அரும்பிய பருவத்தில் இருந்த எங்களை யாரும் பெரியதாக கண்டுகொண்டதில்லை. இன்றும் சலூன்களில் பெருத்த மாறுதல்கள் இல்லை. விசாலமான கண்ணாடிகள் அதிகமாகியிருக்கின்றன. சுவற்றில் நடிகைகள் இல்லை, மாறாக குமுதமும், குமுதம் ஸ்டாரும், ஆனந்த விகடனும், வாரமலரும், குடும்ப மலரும். சில கடைகளில் டைம் மற்றும் இந்தியாடுடே. ரசிக்கும் படியான விஷயங்கள் குழந்தையை கூட்டுவரும் அப்பாமார்கள். அது அழும், சமாதானபடுத்தவேண்டும். விளையாட்டு காட்டவேண்டும். முரண்டுபிடிக்கும், வழிக்கு கொண்டுவர அல்பதனமாக கொஞ்சவேண்டும் - இல்லாவிட்டால் ஊரை கூட்டிவிடும். ஜாலியான விஷயம் என்றாலும் அவர்கள் அசடுவழிவதை காண கண் வேண்டுமய்யா. அரசியல், சினிமா, சூரியன் எப்.எம், சின்ன பாட்டில் ஷவர், படிகாரகல், ஸ்பிரே, சுழலும் பிரமாண்ட நாற்காலி, கண்ணாடிகளில் உள்-கோணங்கள், காத்திருக்கும் நேர டீ.... சலூன் சுவஸ்ரஸ்யமானதுதான்.

இந்தியாடுடேவின் சர்வே

இந்தியாடுடே தனது மூன்றாவது செக்ஸ் சர்வேயை பத்திரிக்கைகளில் பதித்து இந்த ஞாயிறு முழுக்க விவாத மேடைகளிலும் மூழ்ங்கியது ( ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ்தக்). இந்த முறை இளம் பெண்களிடன் ஆய்வு. என் கருத்துகள் இதனின் கொஞ்சம் மாறுபடுகின்றன. பொதுவாக இந்தியாடுடேவும், காமசூத்திரா நிறுவனமும் தங்கள் ஆய்வரிக்கைகளில் நிறைய முரண்பாடுகளை சொல்கின்றன. மக்களை பத்திரிக்கை வாங்க வைக்க இன்றைய அளவில் செக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது. அது இந்தியாடுடேவாக இருந்தாலும், நக்கீரனாக இருந்தாலும், குமுதம் ரிப்போர்டராக இருந்தாலும் ஜூனியர் விகடனாக இருந்தாலும் சரி. ஒன்றும் இல்லை என்றால் இதில் இறங்கிவிடுகிறார்கள் எல்லாரும். திரை திறந்து பார்ப்பதின் ஆர்வம் எல்லாருக்கும் உண்டு. எனக்கு சில கேள்விகள், எத்தனை பேர் உண்மை சொல்லியிருப்பார்கள். சொல்லாதவர்களின் உண்மைகள் எங்கே? ஓரளவுக்கு முன் வந்து பெண்கள் தங்கள் கருத்துகளை சொல்லியிருந்தது பாராட்ட கூடிய விஷயம் எனினும் ஆண்கள் அளவுக்கு பெண்கள் வெளிபடையாக இல்லை இந்த விஷயத்தில் என்பது உண்மையாக அனைவராலும் கருதப்படுமாயின், பதிக்கபட்டுள்ள சதவீதங்கள் எந்த அளவுக்கு சமுதாயத்தில் நிஜம்.? சொல்லாத, சொல்லவிரும்பாத, பத்திரிக்கைகள் சந்திக்காத சதவீதம் என்னவாக இருக்கும்.? மேலா கீழா ? எனினும் ஹைத்திராபாத்தும், சென்னையும் முந்தைய வருடங்களைவிட வித்தியாசம் காட்டியிருப்பதை பத்திரிக்கை ஆசிரியர் சொல்லிகாட்டியுள்ளார். காரணம் ஆராய்ந்தால் வேறு என்னவாக இருக்க முடியும், பணமும் தனிமையுமே. கொஞ்சம் கொஞ்சமாக சமுதாயத்தில் மது அருந்துவது ஒரு அந்தஸ்துக்குரிய விஷயமாகுதலை போல செக்ஸ் ஒரு விஷயமாகும் நாள் அதிக தொலைவில் இல்லையோ? குடும்பம் என்னும் அமைப்பை ஏற்கனவே சீரழிக்கும் சினிமாவும், தொலைகாட்சி நாடகங்களும் மெல்ல மெல்ல செக்ஸையும் - அது முறையற்றதாயினும் தவறில்லை எனும் கருத்தையும் திணித்து கொண்டு வருகின்றது. உதாரணம்: சினிமா பாடல்களும், படமாக்கபடும் விதங்களும், தொலைகாட்சி விளம்பரங்களும், கருத்துகளில் உள்ள பெண்விஷயங்களும், தொலைகாட்சி நாடக சம்பவங்களும், மருத்துவ நிகழ்ச்சிகளும், அதுதவிர கொஞ்சம் கொஞ்சமாக குமுதமும், விகடனும் மற்ற ஜனரஞ்சக பத்திரிக்கைகளும்... இந்த லட்சணத்தில் இணையத்தையும் செல்போன்களையும் குற்றம் சொல்கிறார்கள். அதுவும் தவிர சினிமாவில் புகை பிடிக்கும் காட்சியால்தான் சமுதாயம் கெடுகிறதாம்...மற்றபடி தைரியமான ஒரு சர்வேக்காக இந்தியாடுடேவுக்கு வாழ்த்துக்கள்.

Monday, September 05, 2005

நேரடியாக தமிழில்

நேரடியாக தமிழில் கருத்துகளை பதிக்க இந்த முகவரி அற்புதமாக துணை புரிகிறது.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

சில நேரங்களில்

பெரு நகரங்களின் வாழ்க்கை சூழல் சுனாமியாய் மனித வாழ்வின் நிமிடங்களை சுழற்றும் போதிலும், ஊர் ஞாபகங்கள் வீட்டு தாழ்வாரத்திலலும் திண்ணையிலும் தேங்கி நிற்க்கும் மழை நீர் போல சில நேரங்களில் சலனமிக்கிறது. பாட்டி, வார சந்தை, வருட பொங்கல், தேர் விழா,
ஐய்யானார் பூஜை, கோழி சண்டை, ஓட்டு பள்ளி கூடம், தமிழ் அய்யா, கணக்கு வாத்தி, முட்டி கிழிந்த சண்டை, அய்யர் வீட்டு வத்சலா அக்கா,
தண்ணி துப்பாக்கி, பஞ்சாயத்து ரேடியோ, டூரிங் டாக்கிஸ்...அப்புறமும் எத்தனையோ... என் மகனுக்கோ, மகளுக்கோ இந்த விஷயங்கள் எந்த
ஆவனத்திலும் இருக்காதோ...

கண் முன்னே
முகம் தொலைத்த கிராமங்கள்
சன் டீவில் ஆழ்ந்து...

செப்டம்பர் 21ல்

செப்டம்பர் 21ல் இருந்து ஜாகை மாற்றம். பெருநகரங்களின் வாழ்க்கை சுழலில் நுழையும் மனதும் உடம்பும். சென்னை புதிதல்ல எனினும்,
கோவைக்கு ஒப்பிடும்போது கொஞ்சம் வேறுபாடு புரிகின்றது. நண்பர்கள் உண்டு, தொழில் உண்டு, வாழ்க்கை மட்டும்... அதன் போக்கில்.
அடுத்த பரிணாமம் எல்லா வகையிலும் தேவை...அதற்க்கான காலம் அமைய கொஞ்சம் மெனக்கெட வேண்டும். செய்வோம்... அது தவிர,
படிக்கவும் - எழுதவும் - பார்க்கவும் - பழகவும் நிறைய நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அவ்வண்ணமே நடக்க கடவ... :)

இளையராஜாவின் திருவாசகம்...

இளையராஜாவின் திருவாசகம்...கண் மூடி கேளுங்கள். உயிர் உங்களிடம் இருந்து உருகும். மெல்லிய முன்னிரவில், நிலவு காய, தென்னை
மரங்களோடு, மனம் கொண்ட துணையோடு, கண் மூடி... ஒரு தியானம் போல, கேட்க கேட்க... உயிர் நம்மில் என்ன வடிவம் என்பது
புலனாகிறது. பொதுவில் இசை ரசனை என்பது காலத்தோடு சேர்ந்தது. சில வகை இசை மட்டுமே காலம் தாண்டியும் ஜீவிக்கலாம். திருவாசகம்
அப்படி ஒன்று. மெல்லிய இலை ஒன்று காற்றில் லயத்தோடு பறக்கும் லாவகம் இசை ரசிக்கும்போது வருமேயானில் ஜீவிதம் புனிதமாகிறது.ஓதுவாரின் திருவாசகம் ஆன்மீக சாரல், இசை கொண்ட இந்த திருவாசகம் மனசு நிறைய மட்டும்.

பணம் இன்றைய உலகில்

பணம் இன்றைய உலகில் நிறைய விளையாடுகிறது.. செய்யும் தொழிலின் நேர்மையும்...அதின் நேர்த்தியும் பணத்தின் முன் காணாமல் போகிறது.நிறைய பணம் என்பது குறிகோளாகி, திறமையான தொழில் என்பது வெறும் வார்த்தை பிரயோகமாகிவிட்டது. பணம் தேடாதவனை "பிழைக்க
தெரியாதவன்" என்று சொல்வதில் யாருக்கும் குற்ற மனப்பாண்மை இல்லை. படிப்பு, தொழில் எல்லாமே பணம் சார்ந்தது. எனில் திறமை மட்டும்
கொண்டவன் பிழைக்க வழி...சமூகம் வழிகாட்டுகிறது. குற்றங்கள் பெருக பெருக..படித்தவனின் திறமை பயத்தை விளைவிக்க தொடங்க..சமூகம்
அவனுக்கு மரியாதை கொடுக்கிறது...ஒருவன் வாழ்க்கை அடுத்தவருக்கெல்லாம் சரித்திரம். இன்னும் எத்தனை காலங்களோ.. யார் யாரும் இங்கே
சாட்சிகளாக மட்டும்...

வாழ்வின் பெண்கள்

கமல் தன் வாழ்வின் பெண்கள் பற்றி பேசியிருந்தார்.பெண்கள் இல்லாத உலகம் கற்பனை செய்ய முடியாத ஒன்று என்றார். இதுவரைக்கும் நான் கடந்து வந்த பாதையில் திரும்பி பார்க்கும் போது அவருடைய கருத்து ஒத்து கொள்ளதக்கது. 1ஆம் வகுப்பில் அரைகுறை நினைவுகளுடன் படித்த தனலட்சுமியிலிருந்து, கல்லூரியில் கூட படித்த நாகரத்தினம்...அப்புறம் (தற்போது சண்டிகரில்) வேலை பார்க்கும் சிந்துஜா, சில நாட்களே உடன் பணிபுரிந்த அபிராமி வரை, புதியதாக சேர்ந்து என்னுடன் வேலை பார்த்து கொண்டிருக்கும் ஒரு மதுரைக்கார பெண் லில்லி தெரஸா வரை.. நல்ல நட்பான பெண்கள் நிறைய உண்டு.

அப்புறம், பள்ளி இறுதி கால நாட்களில் நெருக்கம் கொண்ட சில (Special) தோழிகளும் உண்டு. கல்லூரியிலும் உண்டு. வேலை செய்யும் காலங்களிலும் உண்டு. மனசு எல்லாரையும் ஒரே தட்டில் வைப்பதில்லை. இனம் புரியாமல் அது சலனப்படுபோது, ஒவ்வொருவருக்கும் அதுவே
தனித்தனியான தட்டில் அமைக்கிறது. மனசு ஊஞ்சல் என்றார் சுகி.சிவம். ஒரு நிலைப்பாட்டுக்கு வரும் வரை ஆட்டம் கொண்டுதான் இருக்கும்.அதன் போக்கில் விட்டு கட்டுபாடு அடையும் போது நிறைவான கட்டுபாடு சாத்தியமாகிறது. இது இருபாலருக்கும் பொது என்கிறார் சத்குரு
ஜக்கி வாசுதேவ்.ஆதலனினால் நண்பர்களே..சஞ்சலத்தை சஞ்சலத்தோடு அணுகாதீர் !!!!

மஞ்சள் நிறத்தில் ஒரு கோடு...

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறோம்... என்ன செய்வது... முதல் காரணம் இந்திராகாந்தி பல்கலைகழகத்துக்கும் எனக்கும் உள்ள அசைக்க முடியாத பந்தம்... அப்புறம் அலுவக காரணங்கள்... இனிமேல் தொடர்ச்சியாக எழுத முடிவெடுத்துள்ளேன்.. இது ஒரு வகையில் மனதை திருப்திபடுத்துவதான உணர்வுதான் அதற்க்கான காரணம்... கொண்ட வேலைகளுக்கு மத்தியில் ஒரு பொழுதுபோக்கு, யாரையும் தொந்தரவு
செய்யாமல்.


சமீபத்தில் நண்பர்களுடனான ஒரு விவாதத்தில் "Yellow Line Friendship" எனப்படும் ஆண்/பெண் நண்பர்களுடனான நட்பு பற்றி பேசினோம். இது இப்போது உள்ள சமூகத்தில் பரவலாகி உள்ளது. தோழமை தாண்டிய நெருங்கிய உறவுமுறை... ஆனால் எல்லைகள் கொண்ட
நட்பு... என் பெண் நண்பர்கள் சிலர் "Yellow Line" அமைப்பில் உள்ளனர்... எங்களுக்குள் நெருக்கம் உண்டு... எல்லைகளும் உண்டு... ஒரு நண்பர் கேட்டார்... என் பெண் நண்பர்களுடனான உறவு.. " உடல் சார்ந்த ஈர்ப்பா.." .... நான் சொன்னேன்.. "மனம் சார்ந்த ஈர்ப்பு... " .. "இதில் உடல் பங்கேற்பதில்லையா.. "... " மனதை விட குறைவான பங்குதான்.. " ... " அப்போ.. இது காமமா..
காதலா.. "... " நட்பை விட உயர்ந்த.. காதலை விட உயர்ந்த... காமத்தை விட உயிர்ப்பான.. உணர்வு... " "தோளில் சாய்ந்து கொள்வதையும்... கைகளை கோர்த்து கொள்வதையும்... இடுப்பை அணைத்து நடப்பதும்... உம் கண்களுக்கு காமமேயெனில்... விளக்கம்
ஒன்றுமில்லை.... என் பார்வைக்கு... இது நட்பு சார்ந்த ஆளுமை... யாரும் யாரையும் கட்டாயபடுத்துவதில்லை... விருப்பம் கொண்டவர்களிடம் மட்டுமே உள்ள உறவு இது... " அப்புறம் இது பற்றி பேச பெரிய ஆர்வம் யாரும் காட்டவில்லை...பின்னர் ஒரு முறை
கேள்வி கேட்ட நண்பரை ஒரு Java Green Cafeல் அவருடைய தோழியுடன் பார்த்தபோது அவர் புரிந்து கொண்டிருந்தது புரிந்தது. எனினும் யாரும் சுலபத்தில் ஒத்து கொள்வதில்லை. அப்படி இருப்பவர்களையும் சமூகம் கவனிக்கும் தொனி ஒரு காரணம் என்பது என் கருத்து.