அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, November 12, 2005

பெசன்ட் நகர் கடற்கரைக்கு

சென்ற முறை பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றிருந்த போது, ஒரு சிறுமியை பார்த்தேன். கையில் பட்டங்கள் - நிஜ பறக்கும் பட்டங்கள். வாயில் ஏதோ சினிமா பாடல். எல்லாரிடமும் பட்டம் வாங்க சொல்லி கெஞ்சி கொண்டு இருந்தாள். யாரும் அவளை பொருட்படுத்தவில்லை சிலரை தவிர. குழந்தைகளுக்காக பட்டம் வாங்கினார்கள், சில இளைஞ்சர்களும் வாங்கினார்கள்... அப்புறம் நான் மணலில் உட்கார்ந்து கொண்டேன். நண்பர்களில் கடலில் விளையாடிகொண்டு இருந்தார்கள். சில நிமிடங்களில் அந்த சிறுமி பட்டங்களை ஒரு கையிலும் இன்னொரு கையில் ஏதோ ஒரு பொருளுடனும் கடலில் விளையாடி கொண்டிருந்த இளைஞ்சர்களை கெஞ்சி கொண்டு இருந்ததை கவனித்தேன். அவள் கையில் ஏதோ கடல் விலங்கு - அரைகுரை உயிருடன். நீர்வேகத்தில் கரை ஒதுங்கிவிட்டது போலும்,. அதனை மீண்டும் கடலில் விட சொல்லி எல்லாரிடமும் கெஞ்சி கொண்டு இருந்தாள். இம்முறை சுத்தமாக யாரும் அவளை பொருட்படுத்தவில்லை. அப்புறம் பட்டங்களை மணலில் செருகினாள். உடையை மேலிழுத்து செருகி கொண்டு ஒரு கையில் அந்த மீனுடன் கடலில் இறங்கினாள். மார்பளவு தண்ணீரில் நின்று வேகமாக அதனை கடலினுள் வீசினாள். பட்டங்களை எடுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் - மீண்டும் அதே பாட்டை முனுமுனுத்து கொண்டு. என் வயதில் நான் இப்படி இருந்திருக்கிறேனா..? நிச்சயம் கிடையாது. ஒரு மீனுக்காக கவலைபடும் சிறுமி நிச்சயம் என்னிலும் உயர்ந்தவள். சொல்லபோனால் நம் படிப்பு, சமுதாய பழக்கங்கள் எல்லாம் நம் இயல்பு வாழ்க்கையை மெல்ல நம்மிடம் இருந்து எடுத்து கொண்டன. மிஞ்சி நிற்பது சொஞ்சம் சுயநலமும், நிறைய ஆசைகளும் கவலைகளுமே... மனிதாபிமானம், அன்பு, காதல், பரிதாப உணர்ச்சி, உதவி செய்யும் மனோபாவம் மற்றும் மனித உணர்வுகள் எல்லாம் இருந்தால் அற்புதமான ஒரு பெயர் உங்களுக்கு உண்டு நம் சமூகத்தில் -- இளிச்சவாயன்...

4 comments:

Ram.K said...

சிறுவர், சிறுமியர் வியாபாரம் என்னும் போர்வையில் - பிச்சை எடுப்பது போல -அலைவது சென்னையிலுள்ள ஒரு மிகப்பெரிய அவலம்.
:(
பல கருத்துக்கணிப்புகள் அவர்களை குற்றவாளிகளாக வெளிக்கொணருபவை, ஆனால், இப்பதிவு அவர்களின் மற்றுமொரு பக்கத்தைப் பற்றிச் சொல்கிறது.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல பதிவு. நன்றி!

-மதி

Anonymous said...

Thanks for this post. I aslo have seen this kind of happenings.

Anonymous said...

//பல கருத்துக்கணிப்புகள் அவர்களை குற்றவாளிகளாக வெளிக்கொணருபவை//

Chameleon... சிறுமாற்றம் சமூகத்தால் குற்றவாளிகளாக்கப் பட்டவர்கள், கருத்துக்கணிப்புகள் அவர்களை குற்றவாளிகளாக வெளிக்கொணருபவை!

இதுக்கு சமூகம்தாம் முழுப் போறுப்பு!!!